வேளானூர்
அரசு உயர்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் துவக்கவிழா மற்றும் தொல்பொருள்கள்
கண்காட்சி 25.06.2018 அன்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை
ஆசிரியர் வே.கனகராஜ் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் கு.முனியசாமி வரவேற்றுப்
பேசினார்.
நமது
பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் அதில் மாணவர்களின் பங்கு பற்றியும்
மன்றப் பொறுப்பாசிரியர் சா.செல்வகுமார் விளக்கினார்.
ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு
உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி பகுதியின் வரலாற்றுச் சிறப்புகளைக் கூறினார்.
அதன் பின்பு
நடைபெற்ற தொல்பொருள்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண்கற்காலக் கருவிகள்,
இரும்புக்கால கருப்பு சிவப்பு மண் குவளைகள், பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டு
பானை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், குறியீடு உள்ள பானை ஓடுகள், தக்களி, வட்டச்சில்லுகள்,
இரும்புத்தாதுக்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர்கள் அவற்றைப்
பார்த்து அறிந்துகொண்டனர்.
பட்டதாரி
ஆசிரியர் திரவியம் நன்றி கூறினார். கண்காட்சிக்கு உரிய ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முனீஸ்வரன், சசிக்குமார் ஆகியோர்
செய்திருந்தனர்.
No comments:
Post a Comment