உலக மரபு வாரவிழா விழாவை
முன்னிட்டு திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின்
தொன்மைப் பாதுகாப்பு மன்றமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு
நிறுவனமும் இணைந்து திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் மாணவர்களே, மாணவர்களுக்கு
கல்வெட்டு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதன் காணொளி காட்சி உங்களுக்காக
கல்வெட்டு படியெடுக்க தேவையானவை
1. Dabber
[நாய் தோலால் செய்தது]
2. கரி, இந்தியன் மை, கருவேல மர பசை ஆகியவற்றின்
கலவை
3.
Beater [பன்றி முடியில்
செய்த பிரஸ்]
4. நைலானில் செய்த பிரஸ்
5. JK Maplitho paper No 24
கல்வெட்டு படி எடுக்கும் முறை
முதலில் கல்வெட்டு மீது தண்ணீரை ஊற்றி
நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். Maplitho paper ஐ தண்ணீரில் நனைத்து அந்த கல்வெட்டு
மீது அதை ஒட்டி பன்றி முடியால் செய்த Beater ஐ வைத்து அந்த பேப்பர் கல்வெட்டோடு நன்றாக
ஒட்டுமாறு அடிக்க வேண்டும். அப்புறம் Dabber
மீது கரி, இந்தியன் மை, கருவேல மர பசை ஆகியவற்றின் கலவை பொடியை வைத்து தண்ணீர் விட்டு
கலந்து கொண்டு அந்த கல்வெட்டில் ஒட்டியுள்ள பேப்பர் மேல் ஒத்தி எடுக்கவேண்டும்.
இதனால் அது ஜெராக்ஸ் மாதிரி வரும் நாம் எளிமையாகப் படிக்கலாம்.