Pages

Saturday 25 November 2017

தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை சிறப்பாகச் நடைமுறைப்படுத்த சில செயல்திட்டங்கள் – வே.இராஜகுரு



தொன்மைப் பாதுகாப்பு மன்றம்

இராமநாதபுரம் மாவட்டம்


 தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தை திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2010 முதல் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம். இம்மன்றத்தை மாணவர்களிடம் முழுமையாக கொண்டு செல்ல சில செயல் திட்டங்களை கீழே கொடுத்துள்ளேன். நான் இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறேன். அதன் சார்பில் அளிக்கப்பட்டுள்ள இச் செயல்திட்டங்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

Ø தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் போன்றவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ளச் செய்தல்

Ø இராமநாதபுரம் மாவட்ட வரலாறு, அதன் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த இடங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ளச் செய்தல்

Ø தனது ஊர் வரலாறு, அதன் பெயர்க்காரணம், அங்குள்ள நீர்நிலைகளின் பெயர்கள், பாரம்பரியத் தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை அறிந்து ஆவணப்படுத்துதல்

Ø தங்கள் பகுதிகளில் உள்ள சிறுதெய்வக் கோயில்கள், தர்காக்கள் ஆகியவற்றின் வழிபாட்டு முறைகளை அறிந்து ஆவணப்படுத்துதல்

Ø சாதி மத உணர்வுகளை நீக்கி நாட்டுப்பற்று கொள்ளச் செய்தல்

Ø தமிழ் மொழியின்  தொன்மையை மாணவர்கள் அறிந்து கொள்ளச் செய்தல்

Ø அனைத்து மதங்களின் வழிபாட்டுத்தலங்களின் வரலாற்றை அறிந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துதல்

Ø நமது மாவட்டத்தில் சிறப்பாக வழங்கிவரும் கலைகள், நாட்டார் பாடல்கள், கும்மிப்பாடல்கள், ஒயிலாட்டப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் ஆகியவற்றை தேடித் தொகுத்தல்

Ø தங்கள் ஊர்களில் வாய்மொழியாக வழங்கி வரும் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்துதல்

Ø மாவட்டத்தில் உள்ள ஊர்களின் சரியான பெயர்க்காரணங்களைக் கண்டறிதல்

Ø தங்கள் பகுதிகளில் உள்ள ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் ஆகியவற்றை தேடித் தொகுத்தல்

Ø தங்கள் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், கோயில்கள் போன்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகள் பற்றிய தகவல்களை ஆசிரியரிடம் தெரிவிக்கச் செய்தல்

Ø தங்கள் பகுதிகளில் நத்தம், மேடு, திட்டு, திடல்,இலங்கை போன்ற பெயர்களில் வழங்கப்படும் மேடான பகுதிகளையும் அப்பகுதிகளில் பானை ஓடுகள் போன்றவை காணப்படுகின்றனவா போன்ற விவரங்களையும் ஆசிரியரிடம் தெரிவிக்கச் செய்தல். இப்பெயரில் உள்ள பகுதிகள் நம் முன்னோர் வாழ்ந்து அழிந்த இடங்கள் என்பதை அறியச் செய்தல்

Ø ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகளில் உள்ள தமிழின் வேர்ச்சொற்களைக் கண்டறியப் பயிற்சி அளித்தல்

Ø ஒவ்வொரு ஆண்டும் அனைத்துப் பள்ளிகளிலும் நவம்பர் 19 முதல் 25 வரையில் உலக மரபு வாரவிழாவும் (World Heritage Week), ஏப்ரல் 18 அன்று சர்வதேச மரபு நாள் விழாவும் (International Heritage Day) கொண்டாடச் செய்தல்

Ø பாரம்பரியச் சின்னங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று அவை பற்றிய வரலாற்றுச் சிறப்புகளைக் கூறுதல்

Ø ஒவ்வொரு மாதமும் தொல்பொருள்கள், நாணயங்கள், பாரம்பரியச் சிறப்புமிக்க இடங்கள் ஆகியவற்றைப் பற்றிக் கருத்தரங்கம், கண்காட்சி, பயிலரங்கம், ஆய்வரங்கம்  நடத்துதல்

Ø நிகழ்ச்சிகள் அனைத்தையும் மாணவர்களே திட்டமிட்டு நடத்தச் செய்து அவர்களின் படைப்பாற்றல் திறன் வளரச் செய்தல்

Ø பிற பள்ளி மாணவர்களுடன் இணைந்து பயிற்சி முகாம் நடத்துதல்

Ø கோயில் உள்ளிட்ட மரபுச் சின்னங்களை சுத்தம் செய்து அதை பாதுகாக்கச் செய்தல்.

Ø நமது பாரம்பரியம் பற்றி பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடி வினா போன்ற போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி மாணவர்களை ஊக்குவித்தல்

Ø Centre for Cultural Resources and Training (CCRT) இல் தங்கள் பள்ளி மன்றங்களைப் பதிவு செய்து ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் ஐயாயிரம் நிதிவுதவி பெறச்செய்தல்.

CCRT Cultural Club

The richness and variety of Indian culture, the 10,000 years of its history and the cultural continuity in it, myriad forms of traditions need to be preserved. The promotion, preservation and dissemination of information on India's cultural heritage has been the prime concern of this Centre (CCRT). With this objective in mind, the CCRT has undertaken the task of setting up CULTURAL CLUB IN SCHOOLS.
A Cultural Club is a means by which school students can organize themselves to learn more about India's Cultural Heritage. For teachers it is a tool to create awareness, develop respect and appreciation towards Indian arts. And also motivate school students to undertake action-projects to conserve Indian Cultural traditions.
CCRT provides a financial assistance of Rs.5000/- initially for one academic session. (April 01 to March 31).
A detailed report of the activities conducted throughout the year is mandatory as part of implementation of CCRT’s Cultural Club Scheme in the Schools.
Over the years while going through the reports of various Cultural Clubs, it was felt that students were doing excellent work which should be put up on Centre’s Website. This will act as a platform for other schools to interact and exchange ideas related to Indian Culture. Keeping this in mind Cultural Club reports were evaluated with a purpose to select best Cultural Club reports to be put up on our website.
In order to analyse and finalise the best Cultural Club Reports to be placed on CCRT's Website to be accessible to the member schools, a Committee was formed for the selection of best Cultural Club Reports each year.

வே.இராஜகுரு, 
ஒருங்கிணைப்பாளர், 
தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள், 
இராமநாதபுரம் கல்வி மாவட்டம்.  
செல்பேசி :  9944978282



அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை உருவாக்கி செயல்படுத்த மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் ஆர்வம் - வே.இராஜகுரு


அமைச்சர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர்

உலக பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனை அகழ்வைப்பகம், இராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து, ஆர்.கே.சாமி கல்வியியல் கல்லூரி மாணவ மாணவியருக்கு தொல்பொருட்கள் பராமரித்துப்  பாதுகாத்தல் பயிற்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி ஆகியவற்றை  நடத்தின. 25.11.2017 அன்று அதன் நிறைவு  விழாவில் தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மாணவ மாணவியருக்குச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசும்போது,
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மொத்தம் உள்ள 24 ஆயிரம் அரும்பொருட்களில் 11 ஆயிரம் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதைவிட அதிகமான பொருட்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தொன்மை வளம் மற்றும் பாரம்பரியச் சிறப்புக்கு இது சிறந்த ஆதாரமாக உள்ளது.
மாணவர்கள் எழுதிய "தேடித்திரிவோம் வா" எனும் நூலின் அச்சுப் பிரதியை அமைச்சரிடம் வழங்குகிறோம் 

இதுவரை தமிழ்நாட்டில் 80 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு தொல்லியல் துறை மூலம் 39 இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது.  ஐரோப்பாவில் நாடோடிகளாக திரிந்த காலத்திலேயே நாம் மிகத் தொன்மையான பாரம்பரியச் சிறப்புடன் வாழ்ந்து வந்துள்ளோம் என்பதை  இவ்அகழாய்வுகள் நிரூபித்துள்ளன.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் உள்ளது. அப்படியானால் அதற்கு முன்பே தோன்றிய அதன் இலக்கியம் எவ்வளவு பழமையானது என்பதை  உணர்ந்தால் தமிழின் தொன்மையை அறியலாம்.

தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை வெற்றிகரமாக செயல்படுத்த சில செயல்திட்டங்களையும் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் வழங்கினோம்.

 இவ்வளவு சிறப்பு வாய்ந்த நமது தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் போன்றவற்றை மாணவர்கள் தெரிந்து கொண்டால் தான்  அவற்றைப் பாதுகாக்கமுடியும். கீழடி போன்ற தமிழர் தொல் வாழ்விடங்களை அடையாளம் கட்டியவர்கள் மாணவர்களும் ஆசிரியர்களும் தான் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
எனவே அனைத்து  பள்ளி, கல்லூரிகளிலும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை உருவாக்கி செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அறிவியல் ஆய்வுக் கூடங்கள் போல் வரலாற்று ஆய்வகங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.  தமிழகத்தில் 35 அரசு அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் உள் கட்டமைப்பு வசதிகளை உலகத் தரத்திற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளோம்இவ்வாறு அவர் கூறினார்.
திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் கண்டெடுத்த ஈழக்காசுகளை மாண்புமிகு அமைச்சருக்கு நினைவுப் பரிசளித்தனர். அவர்களின் வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் பற்றிய பதிவுகள் கொண்ட நூல் ஒன்றை மாண்புமிகு அமைச்சரிடம் வழங்கினர். தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை வெற்றிகரமாக செயல்படுத்த சில செயல்திட்டங்களையும் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் வழங்கினோம்.
முன்னதாக இராமலிங்கவிலாசம் அரண்மனை காப்பாட்சியர் ஆசைத்தம்பி வரவேற்றார், நிகழ்ச்சியில் ராமநாதபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இராமலிங்கவிலாசம் இளநிலை பொறியாளர் பிரபா நன்றி கூறினார். உலக பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு புத்தகக் கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டு புத்தகங்கள் வாங்கினார்.
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர், செயலர் மற்றும் மாணவிகள்

ஓவியப்போட்டியில் எங்கள் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி கோகிலா மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி புவநிஷா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். இரண்டாம் பரிசு ஒன்பதாம் வகுப்பு மாணவன் முனீஸ்வரன் மூன்றாம் பரிசு ஆறாம் வகுப்பு அபிராமி ஆகியோர் பெற்றனர். பரிசு பெற்ற மாணவியரை அனைவரும் பாராட்டினர்.
ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்ற கோகிலா
ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்ற புவநிஷா
ஓவியப்போட்டியில் இரண்டாம்  பரிசு பெற்ற முனீஸ்வரன்

ஓவியப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற அபிராமி


நாளிதழ் செய்தி