இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் பொறுப்பாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியில் 12.12.2017 அன்று மாலை 2 மணிக்கு நடைபெற்றது.
|
இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் பேசுகிறார் |
கூட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் திரு. முத்துசாமி தலைமை வகித்தார். வாலந்தரவை பள்ளி ஆசிரியர் திரு. இரவீந்திரன் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர் பேசும்போது, தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் போன்றவற்றை மாணவர்கள் தெரிந்து கொள்ள தொடங்கப்பட்டுள்ள இந்த மன்றம் மாணவர்களிடம் ஆர்வத்தை உருவாக்கி தேடல் பண்பை வளர்க்கும். வரலாறு தெரிந்தவர்களால் தான் வரலாற்றை பாதுகாக்க முடியும். இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட மாவட்டம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதி மக்கள் கல்வியில் சிறந்து விளங்கியதை அழகன்குளம், தேரிருவேலி அகழாய்வு மூலம் நாம் நிரூபித்திருக்கிறோம். இம்மாவட்டத்தில் கலைகள், பாரம்பரிய பாடல்கள், வரலாற்றுச் சுவடுகள் அதிகளவில் உள்ளன. அவற்றை அடையாளம் கண்டு வெளிக்கொண்டுவர இந்த அமைப்பின் மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
|
இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. வே.இராஜகுரு பேசுகிறார் |
இராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு. வே.இராஜகுரு பேசும்போது, இம்மன்றத்தின் நோக்கம், இதன் அமைப்பு, மாணவர்களைக் கொண்டு மன்றக் கூட்டத்தை நடத்தும்விதம், மாணவர்களிடம் ஆய்வு மனப்பான்மையை வளர்க்க வேண்டியதன் அவசியம், தொன்மைச் சிறப்புவாய்ந்த இடங்களை அடையாளம் காணுதல், இந்த மன்றத்தின் சிறப்பான செயல்பாடுகள் மூலம் நமது பாரம்பரியச் சிறப்பை மாணவ சமுதாயத்தினரிடம் கொண்டு செல்வது ஆகியவை பற்றிப் பேசினார்.
வட்டானம் பள்ளி ஆசிரியர் திரு. இராபர்ட் புரோமியர் நன்றி கூறினார். இராமநாதபுரம் கல்வி மாவட்டத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியிலிருந்து 60 பொறுப்பாசிரியர்கள் கலந்துகொண்டனர்.
நாளிதழ் செய்திகள்
இணைய இதழ்
நக்கீரன்
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=203393