Pages

Showing posts with label கருத்தரங்கம். Show all posts
Showing posts with label கருத்தரங்கம். Show all posts

Friday, 26 November 2021

உலக மரபு வார விழா 2021 கருத்தரங்கம்

 


தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, இராமலிங்க விலாசம் அரண்மனை மற்றும் அகழ்வைப்பகம் சார்பில் உலக மரபு வார விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் சுமதி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் கீதா மாணிக்க நாச்சியார் முன்னிலை வகித்தார். மாணவி தேன்மொழி வரவேற்றார்.  இராமநாதபுரம் தொல்லியல் அலுவலர் ம.சுரேஷ் தமிழக அகழாய்வுகள் என்ற தலைப்பிலும், இராமநாதபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகக்  காப்பாட்சியர் வி.சிவக்குமார் அருங்காட்சியகவியல்  பற்றியும், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலர் வே.இராஜகுரு இராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் தடயங்கள் பற்றியும் பேசினர். மாணவி இராமவள்ளி நன்றி கூறினார். தமிழ் துறை கௌரவ விரிவுரையாளர்கள் கவிதா, அருணா பிரபா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.




நாளிதழ் செய்திகள்






Tuesday, 20 July 2021

இராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரியில் சொற்கள் வழி வரலாறு கருத்தரங்கம்

 

இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் 08.03.2021 அன்று நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி தலைமை வகித்து பேசியபோது, மொழித்திறனை வளர்த்துக்கொள்ள மாணவிகள் கூடுதலாக வேறு மொழிகளையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முதலாமாண்டு மாணவி கீர்த்தனா தேவி அனைவரையும் வரவேற்றார். ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் சகினா சாலிகு அறிமுக உரையாற்றினார். எலக்ட்ரானிக்ஸ் துறைத்தலைவர் இராஜேஸ்கண்ணன், வேதியியல் துறைத்தலைவர் முத்தாலீஸ்வரி, கௌரவ விரிவுரையாளர் முனைவர் முகம்மது ஷிரின் ஷாஃபியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். 

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலருமான வே.இராஜகுரு சொற்கள் வழி வரலாறு என்ற தலைப்பில் பேசியபோது, வேர்ச்சொல் ஆய்வு, ஆங்கிலத்தில் உள்ள தமிழ் சொற்கள், சொற்களின் வழியே அறியும் வரலாறு, ஊர்களுக்கு பெயர் வைக்கும் முறை, கல்வெட்டுகளில் காணப்படும் சில சொற்கள், இராமநாதபுரம், முகவை ஆகியவற்றின் பெயர்க்காரணம் ஆகியவை பற்றிக்  கூறினார். இரண்டாமாண்டு மாணவி கீர்த்தியாகினி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை கௌரவ விரிவுரையாளர்கள் கீதப்பிரியா, முத்துப்பிரியாள், சண்முகப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.


நாளிதழ் செய்திகள்










Thursday, 9 July 2020

திருப்புல்லாணி அரசுப்பள்ளியில் பாரம்பரிய தமிழர் கலைகளும் வணிகமும் கருத்தரங்கம்


ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் பாரம்பரிய தமிழர் கலைகளும் வணிகமும்என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கம் 14.11.2019 அன்று நடைபெற்றது. 7 ஆம் வகுப்பு மாணவன் மு.சண்முகராஜ் அனைவரையும் வரவேற்றார். மன்றத்தின் செயலாளர்  வே.ராஜகுரு முன்னிலை  வகித்தார்.

கருத்தரங்கத்துக்கு பள்ளியின் உதவி தலைமையாசிரியர் .சண்முகநாதன்  தலைமை வகித்துப் பேசுகையில் “உலகளவில் நமது கலைகள் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. இவற்றின் சிறப்பை அறிந்து மாணவர்கள் அவற்றை பாதுகாக்கவேண்டும்” என்றார்.
கருத்தரங்கத்தில் ஓவியக்கலை குறித்து ஜீ.ஹரிதா ஜீவா, சிற்பக்கலை குறித்து .அபிராமி, நிகழ்கலை குறித்து வி.டோனிகா, மண்பாண்டக்கலை குறித்து மு.பிரவீணா, கப்பற்கலை குறித்து சே.ஆனந்தி, தமிழர் வணிகம் குறித்து ஜெ.யோகஸ்ரீ ஆகியோர் பேசினர். 8-ம் வகுப்பு மாணவன் மு.மகேஸ்வரன் நன்றி கூறினார். 8-ம் வகுப்பு மாணவிகள் சு.முத்துமாரி, ஜெ.சுஜிதாஸ்ரீ ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எட்டாம் வகுப்பு மாணவர்கள் து.மனோஜ், பாலாஜி, அஸ்வின்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


நாளிதழ் செய்திகள்








மாணவியர் பேசியதன் காணொளிகள்

'தமிழர் வணிகம்' ஆறாம் வகுப்பு மாணவி திருப்புல்லாணி ஜெ.யோகஸ்ரீ



'ஓவியக்கலை பற்றி 7-ஆம் வகுப்பு மாணவி ஆணைகுடி ஜீ.ஹரிதா ஜீவா



'நிகழ்கலை' எட்டாம் வகுப்பு மாணவி பள்ளபச்சேரி வி.டோனிகா


'கப்பற்கலை' - 7ஆம் வகுப்பு மாணவி திருப்புல்லாணி சே.ஆனந்தி



'சிற்பக்கலை' - 8ஆம் வகுப்பு மாணவி பொக்கனாரேந்தல் க.அபிராமி



'மண்பாண்டக்கலை' குறித்து எட்டாம் வகுப்பு மாணவி திருப்புல்லாணி மு.பிரவீணா