Pages

Tuesday 11 September 2012

புகைப்படக் கண்காட்சி


திருப்புல்லாணி எஸ்.எஸ்.ஏ.எம். அரசு மேல்நிலை பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில், தமிழக பாரம்பரியம் பற்றிய புகைப்படக் கண்காட்சி 06.09.2012 அன்று நடைபெற்றது.  கண்காட்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. வே.பென்சாம் துவக்கி வைத்தார். கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான பாண்டிய மன்னர்களால் அமைக்கப்பட்ட பிள்ளையார்பட்டி, சித்தன்னவாசல், திருமயம்,கழுகுமலை, கீழக்குயில்குடி, குடுமியான்மலை, ஆகிய ஊர்களில் உள்ள குடைவரைக்கோயில்கள் பற்றிய செய்திகளுடன் புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. 

கண்காட்சியை தலைமையாசிரியர் திறந்து வைக்கிறார்
கண்காட்சியை தலைமையாசிரியர்பார்வையிடுகிறார்
      தமிழகத்திலுள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களான மாமல்லபுரம், கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள் பற்றியும், எட்டாம் நுற்றாண்டு முதல் தமிழகத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களுக்கு கீழக்கரையில் 12 ஆம் நூற்றாண்டில் கல்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது பற்றியும், தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. 


கண்காட்சிக்கான ஆயத்தப்பணியில் மாணவர்கள்

மாணவர்கள்  இரகுவரன், இராஜ்குமார்,தினேஷ்,கவுரிசங்கர்,வேல்முருகன்

மாணவியர் பூஜா,நந்தினி,கோகிலா,செல்வப்ரியா,அகிலா

மாணவர்கள் இரகுவரன், இராஜ்குமார்
கண்காட்சியை இரகுவரன், இராஜ்குமார், அகிலா, நித்யா, மனோஜ், கவுரிசங்கர், காவேரி, சாஜிதாபேகம், லைலத்து ஜப்ரீன், தினேஷ், பூஜா, நந்தினி, செல்வப்ரியா, வேல்முருகன், ஜெயராமன், கோகிலா, அம்ரின் நிஷா, ஹரிஹரன், மங்களராசு, கருப்புசாமி ஆகிய மாணவர்களுடன்,   மன்றப் பொறுப்பாசிரியர் திரு. வே.இராஜகுரு, முதுகலை ஆசிரியர்கள் திரு.இ.சண்முகநாதன், திரு.கருணாநிதி, திரு. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.  பள்ளி மாணவ, மாணவியர் கண்காட்சியை கண்டு களித்தனர்.
முதுகலை ஆசிரியர் சண்முகநாதன், கருணாநிதி பார்வையிடுகிறார்

மன்ற பொறுப்பாசிரியர் இராஜகுரு மாணவர்களுக்கு விளக்குகிறார்

பட்டதாரிஆசிரியர் நவநீதக்கிருஷ்ணன் பார்வையிடுகிறார்.

கண்காட்சி பற்றி மாணவர்களின் கருத்துக்கள்

மாணவர்கள் பார்வையிடுகிறார்கள்

மாணவியர் பார்வையிடுகிறார்கள்

மாணவ மாணவியர்  பார்வையிடுகிறார்கள்

மாணவி பூஜா,கருப்புசாமி விளக்குகிறார்கள்

முதல் காரும் முதல் பேருந்தும்

புதுக்கோட்டை மன்னர் தான் தமிழகத்தில் முதன் முதலாக கார் வாங்கினார். PACKARD CAR  என அழைக்கப்பட்ட அந்த கார் 1901 இல் வாங்கப்பட்டது. அந்த கார் இயங்க ஆஸ்திரேலியாவில்இருந்து பெட்ரோல் வரவழைக்கவும் ஆங்கில அரசு அனுமதி வழங்கியிருந்தது.
முதல் கார் மட்டுமன்றி முதல் பேருந்தும் புதுக்கோட்டையில் தான் ஓடத் தொடங்கியது. தமிழ்நாட்டில் முதலில் ஓடிய பேருந்து பிரான்சு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்குச் செல்லும் பாதையில் இந்த பேருந்தின் உபயோகத்திற்காக ஆங்காங்கே பெரிய தொட்டிகளில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். இந்தப் பேருந்தை வாங்கியவரும் புதுக்கோட்டை மன்னர்தான் வாங்கிய ஆண்டு 1904.
1904 ஆம் ஆண்டில் முதன் முதலாக புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு வாகனங்கள் விடப்பட்டன. இதைத் தொடர்ந்து தஞ்சாவூருக்கும் அறந்தாங்கிக்கும் விடப்பட்டன.

மாமல்லபுரம்


Û இங்குள்ள கடற்கரைக் கோயில் உலகப்புகழ் பெற்றது. இது இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700 - 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை
Û இயற்கையான பாறையைச் செதுக்கி தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில் தேர் போல காட்சியளிப்பதால் அவை இரதம் எனப்படும். முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (கி.பி. 630 - 668) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.
Û சுமார் 30மீட்டர் உயரம், சுமார் 60மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அருச்சுனன் தபசு என்றழைக்கப்படுகிறது.
Û கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் உள்ள குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது.
Û யுனெஸ்கோவால் (UNESCO) இது உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




Monday 10 September 2012

குடுமியான்மலை


z புதுக்கோட்டையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் 
நாயக்கர் கால கட்டுமானக்கோயில்
.
z இவ்வூரில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால குடைவரைக் கோயில் ஒன்றும், அதே காலகட்டத்தில் அமைக்கப்பட்ட  இசைகல்வெட்டும், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கட்டுமானக் கோயில் ஒன்றும் உள்ளது.

z இங்குள்ள இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக் கிடைக்கின்றன. இங்கு காணப்படும் கிரந்த எழுத்துக்களைப் போன்ற எழுத்துகள் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி மற்றும் சென்னை அருங்காட்சியக செப்பேடுகளிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
z 'சித்தம் நமஹ சிவாய' என்று தொடங்கும் இசை  பற்றிய இந்தக் கல்வெட்டு ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
z இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும்.
z முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது.
z குடுமி என்றால் தலைமுடிக் கற்றை என்று மட்டும் பொருளல்ல மலையுச்சி, உயர்ந்தவர் என்றெல்லாம் பொருள்படும்.
z குன்றின் மீது ஒரு இயற்கைக் குகையினைக் காண்கிறோம். இது கற்கால மனிதர்களின் இருப்பிடமாக இருக்கலாம்.
மலையில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள்

குடைவரையில் உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ளது போன்ற வலஞ்சுழி துதிக்கை விநாயகர்

இசைக்குறிப்புகள்


சதுரவடிவ ஆவுடையார் லிங்கம்