Pages

Wednesday 5 September 2012

சித்தன்னவாசல் – சமணர் குடைவரைக்கோயிலும், ஓவியமும்


·       தமிழக ஓவியக்கலை வரலாற்றில் தலையாய இடம் பெற்றவை – சித்தன்னவாசல்.
·       அறிவர் கோயில் என்னும் சமணர் குடைவரைக்கோயில் முற்காலப் பாண்டியர் காலத்தில் கி.பி.ஏழாம் நுற்றாண்டில் குடையப்பட்டதாகும்.

·       மேற்கு நோக்கிய இக்குடைவரைக்கோயில் கருவறை மற்றும் முகமண்டபத்தை உள்ளடக்கியது. கருவறையின் பின்பக்கச் சுவரில் மூன்று சமண தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.  
·       முகமண்டபத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் பார்சுவநாதர் மற்றும் சமண ஆசான்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
·       முகமண்டபத்தின் விதானம் மற்றும் தூண்களின் மேற்பகுதி ஆகியவற்றில் தாவர வண்ணங்களிலான ஓவியங்கள் அழகுற தீட்டப்பட்டுள்ளன.
·       சமண மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சமவசரணத்தை எடுத்துக்காட்டுவது போன்று தாமரைக் குளத்தில் மலர் சேகரிக்கும் ஆண்கள், விலங்குகள்,அன்னம் போன்ற பறவைகள், மீன்கள் மற்றும் தாமரை,அல்லி மலர்களும் விதானத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.
·       மேலும் அரசன்,அரசி மற்றும் நடன மகளிர் உருவங்களும் தூண்களின் மேல்பகுதியில்  தீட்டப்பட்டுள்ளன. அஜந்தா குகை ஓவியங்களை ஒத்துள்ள இவை தென்னக ஓவியக்கலை வளர்ச்சிக்கு முன்னோடி எனலாம்.
·       இங்குள்ள முற்காலப்பாண்டிய மன்னன் அவனிபாதசேகரன் ஸ்ரீவல்லபனுடைய (கி.பி.815-862) கல்வெட்டு மூலம் இளங்கௌதமன் என்னும் மதுரை ஆசிரியரால் இக்கோயில் கருவறையை செப்பனிட்டமை மற்றும் முகமண்டபத்தைக் கட்டியமை ஆகிய திருப்பணிகளை அறிய முடிகிறது.





பார்சுவநாதர்

மகாவீரர்

கருவறை

No comments:

Post a Comment