இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கெங்கும் சீமைக்
கருவேல மரங்களே (Prosopis
juliflora)
நீக்கமற நிறைந்துள்ள நிலையில் மிக அரிதான மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடிய
சில தாவரங்களும் இங்கு இயற்கையாகவே வளர்ந்து வருவது இம்மாவட்ட தொன்மைக்குச்
சான்றாக உள்ளது. அத்தாவரங்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் காணப்படுவது மிகவும்
ஆச்சரியமளிப்பதாக உள்ளது.
திருப்புல்லாணி
அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு
மன்ற பொறுப்பாசிரியரும்,
தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு, இராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாற்றுச்சிறப்பு
மிக்க களத்தாவூர்,
கீழச்சீத்தை, நரிப்பையூர், செங்கமடை ஆகிய இடங்களில் களஆய்வு செய்த போது இம்மாவட்டத்தில் பெரும்பாலும் காணப்படாத அரிதான சில மூலிகைத்தாவரங்கள் அங்கு இருப்பதைக் கண்டறிந்தார்.
இராமநாதபுரம் அருகே களத்தாவூர் – சங்கஞ்செடி:
சங்கஞ்செடி
|
இராமநாதபுரம்
அருகே உள்ளது களத்தாவூர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில்,
திருநெல்வேலி சுத்தமல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர் சோழபுரம், திருப்புல்லாணி ஆகிய
கோயில்களில் உள்ள கல்வெட்டுக்களில் செவ்விருக்கை நாட்டு களத்தாவூர் அரூர் என்ற ஒண்ணில கீர்த்தி நல்லூர்
என குறிக்கப்படும் இந்த ஊர் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் புகழ் பெற்று
விளங்கியுள்ளது.
இந்த ஊர் கண்மாய் கரையில் புதர் செடியாக
(shrub) சங்கஞ்செடி காணப்படுகிறது. இப்பகுதியில் எங்கும் இல்லாமல் இந்த ஊரில்
மட்டும் இச்செடி காணப்படுகிறது.
முட்சங்கான், இசங்கு, உவரிச்சங்கம் என பல
பெயர்களில் அழைக்கப்படும் சங்கஞ்செடி ஒரு மூலிகைச் செடி ஆகும். இதன் பழம் சங்கு
போன்ற வெள்ளை நிறத்தில் இருப்பதால் இப்பெயர் இதற்கு வந்திருக்கலாம். இதன் தாவரவியல் பெயர் Azima tetracantha Lam ஆகும். இதன் இலை,
வேர், பழம் ஆகியவை மருத்துவக் குணமுடையவை.
பெரிய
அளவிலான பச்சை நிற முட்களைக் கொண்டுள்ள இச்செடியின் தண்டும் பச்சை நிறத்தில் தான்
இருக்கிறது. இதன் இலைகள் உறுதியானதாக பளபளப்பாக இருக்கிறது. இதன் மலர்கள் வெண்ணிறமானவை.
பூங்கொத்துகளாய் பூப்பவை. இதன் பழங்கள் வெண்ணிறத்தில் கோள வடிவமானவை. இவை பிப்ரவரி
முதல் ஏப்ரல் வரையில் பூத்து மே முதல் ஜூன் வரை காய்க்கக் கூடியவை. கடலோர சமவெளிகள்,
பொட்டல்வெளிகள், வறண்ட காடுகள் மற்றும் 2500 அடி வரை உயரமான பகுதிகளில் புதர்களாக
இவை காணப்படுகின்றன.
இதன் வேர்கள்
ஹெபாடைடிஸ் ‘பி’ க்கு சிறந்த மருந்தாகும். இந்தச்
செடியின் வேருக்கும், இலைக்கும்
சிரங்கு,
சொறி,
புண்,
கொப்பளம், கரப்பான், பித்தநோய் ஆகிய நோய்களைத் தீர்க்கும் சக்தி உண்டு.
உத்தரகோசமங்கை அருகே கீழச்சீத்தை – கொக்கிமுள் ஆதண்டை :
களரி கண்மாய் கரையில்
கொக்கிமுள்
ஆதண்டை
|
கொக்கிமுள்
ஆதண்டை
|
உத்தரகோசமங்கை அருகே உள்ள கீழச்சீத்தை என்ற ஊரில் உள்ள கானத்திடலில்
பண்ணைக்குட்டை தோண்டிய இடத்தில், 2300 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககாலத்தைச் சேர்ந்த
ஒரு ஊர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு ரோமானிய மற்றும் சீன பானை ஓடுகள்
கிடைத்துள்ளன. இவ்வூர் கி.மு.300 முதல் கி.பி.1200 வரையிலான காலத்தில் புகழ்
பெற்று விளங்கி இருந்துள்ளது.
பண்ணைக்குட்டை அருகில் களரிக் கண்மாய் கரையில் கொக்கிமுள் ஆதண்டை என்ற
புதர்ச்செடி உள்ளது. இச்செடி இங்கு மட்டும் அரிதாகக் காணப்படுகிறது. கொக்கி போன்ற
முட்களுடன் காணப்படுவதால் இச்செடி இப்பெயர் பெற்றிருக்கிறது. முட்டை போன்ற
வடிவத்தில் இதன் இலைகள் காணப்படுகின்றன. இதன் காய்கள் கோளவடிவில் பச்சை நிறத்தில் உள்ளன.
இவை மே முதல் ஜூலை வரையில் பூத்து செப்டம்பர் முதல் டிசம்பர் வரை காய்க்கக்
கூடியவை. இத்தாவரம் புதர் போல்
வளர்ந்தும் கொடிபோல் படர்ந்தும் காணப்படுகிறது.
வறண்ட முல்லை நிலக் காடுகள், நெய்தல் நிலம் மற்றும் 3000 அடி வரை
உயரமான பகுதிகளில் இவை வளரும் தன்மை உடையவை. கருஞ்சூரை, காட்டுக்கத்தரி, கரிந்து என
பல பெயர்களால் இது அறியப்படுகிறது. இதன் தாவரவியல்
பெயர்
Capparis sepiaria ஆகும். இதன் இலைகள், பூக்கள், வேர்கள் முதலியவை மருத்துவக்
குணமிக்கவை. இதன் வேர்கள் இருமல் மற்றும் பாம்புக்கடிக்கும், இலைகள் நீரிழிவு
நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.
நரிப்பையூர்
பிழைபொறுத்தம்மன் குடியிருப்பு –
மணிப்பூவந்தி
மணிபூவந்தி மரம் |
அற்புதமான தகவல்கள் அருமையான சேவை. நன்றி. வாழ்க. வணக்கம்
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்
ReplyDeleteநன்றி.
Thank you sir. You have a good heart
ReplyDeleteஅரிய மூலிகைகள் பற்றிய அருமையான தகவல்கள்.
ReplyDeleteஇராமனாதபுரம் மாவட்டம் வறண்ட பகுதி என்ற எண்ணமே மக்களிடையே மேலோங்கியுள்ளது. பல அற்புதமான மூலிகைகள் இயற்கையாக வளர்ந்துள்ளதை கவனித்துள்ளேன். மக்களும்,ஆட்சி மன்றங்களும் இயற்கை வளத்தை அறியாமல் அழித்துவருவது வேதனை!