Pages

Wednesday 25 May 2016

பாம்பனில் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பயிற்சி முகாம்







திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் பாம்பனில், அதன் தொன்மைச் சிறப்புகள் பற்றிய பயிற்சி முகாம் 28.10.2015 அன்று நடைபெற்றது. மன்ற உறுப்பினர்கள் பாம்பன் இரயில் பாலம் காண நேரில் அழைத்துச் செல்லப்பட்டனர். மாணவி கீர்த்தனா வரவேற்றுப் பேசினார். பாலத்தின் சிறப்புகள் பற்றி மன்றப் பொறுப்பாசிரியர் இராஜகுரு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். 


மாணவர்கள் பாலத்தில் இரயில் செல்வதையும், பெர்ஜர் தூக்குப் பாலத்தையும் நேரில் பார்த்து அதன் சிறப்புகளை அறிந்து கொண்டனர்.
மேன்மைமிகு அப்துல்கலாம் அவர்கள் சமாதியில் மாணவர்கள் வழிபாடு செய்தனர். 




இராமேஸ்வரம் நம்பு நாயகி கோயில் வளாகத்தில் இருந்த அப்பகுதியின் மரமான கைதை மரத்தை பார்வையிட்டனர். கைதை என்பது தாழை மரத்தின் ஒருவகை ஆகும்.

பாம்பு போல் நீண்ட வேர் கொண்ட ஆலமரம்

கைதை மரத்தின் முன் நாங்கள்

இத்தனை சிறப்புகள் கொண்ட இந்தப் பாலத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக்கொண்டனர். மாணவி அபர்ணா நன்றி கூறினார்.

நாளிதழ் செய்தி 

 

No comments:

Post a Comment