Pages

Wednesday 11 May 2016

உலக மரபு வாரவிழாவை முன்னிட்டு தொல்பொருள்கள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி





திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் உலக மரபு வாரவிழாவை முன்னிட்டு தொல்பொருள்கள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி 27.11.2015 அன்று நடைபெற்றது. 







கருத்தரங்கத்துக்கு பள்ளித் தலைமையாசிரியர் மு.பிரேமா தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் இராமு வரவேற்றுப் பேசினார். போற்றிப் பாதுகாக்க வேண்டியவை என்ற தலைப்பில் மன்றப் பொறுப்பாசிரியர்ராஜகுரு, தொல்லியல் ஆய்வுகள் பற்றி பட்டதாரி ஆசிரியர் கிருஷ்ணவேணி, மரபுசார் விழிப்புணர்வு பற்றி பட்டதாரி ஆசிரியர் ஹெலன் ஜாய்ஸ் நிர்மலா ஆகியோர் பேசினர். மாணவிகள் கோகிலா, இராஜாத்தி, நஸ்ரியா பானு, சப்ரினா, லேகா ஸ்ரீ, சேதுலட்சுமி, தேவி ஆகியோர் கருத்தரங்கத்தில் பங்கேற்றுப் பேசினர். இடைநிலை ஆசிரியர் நவராஜ் தேவசகாயம் நன்றி கூறினார். 
 

கண்காட்சியில் மாணவி கோகிலா கருப்பு சிவப்பு பானை ஓடுகள் பற்றி விளக்கமளிக்கிறார்.







அதன் பின்பு நடைபெற்ற தொல்பொருள்கள் கண்காட்சியில் மாணவர்களால் சேகரிக்கப்பட்ட பழமையான கருப்பு சிவப்பு பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டு பானை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், நாணயங்கள், முதுமக்கள் தாழிகள், சங்குகள், குறியீடு உள்ள பானை ஓடுகள், தக்களி ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சிக்கு உரிய ஏற்பாடுகளை வைசங்கர், சதீஸ்குமார், சுரேஷ் பாண்டியன், கணேஷ் ஆகிய மாணவர்கள் செய்திருந்தனர்.
 

நாளிதழ் செய்திகள்







No comments:

Post a Comment