Pages

Wednesday 11 May 2016

உலக மரபு வாரவிழாவையொட்டி பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி



தொண்டி. நவ.21-
திருவாடானை பாரம்பரிய மன்றம், திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் ஆகியவை சார்பில் உலக மரபு வாரவிழா நடைபெற்றது. இதனையொட்டி பள்ளியில் செயல்படும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த மாணவிகள் சுமார் 50 பேர் திருவாடானை ஆதிரெத்னேசுவரர் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மாணவிகளுக்கு திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் ராஜகுரு, அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பழனியப்பன், தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்கள் தேனம்மை, முத்துராஜா ஆகியோர் பாண்டிய மன்னர்களின் கட்டிட வடிவமைப்பு, வரலாற்று செய்திகளை பறைசாற்றும் மூலிகை ஓவியம், சிற்பங்கள் வடிவமைப்பு, கோவிலின் அமைப்பு பற்றி மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.
               தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு தலைமை ஆசிரியர் கலா தலைமை தாங்கினார். இதில் உலக மரபு வாரவிழாவின் அவசியம், ராமநாதபுரம் மாவட்டத்தின் பழமை வாய்ந்த வரலாறுகள், பாரம்பரியத்தை காக்க வேண்டியதின் அவசியம், அகழ்வாராய்ச்சி குறித்தும் விழிப்புணர்வு அளித்தனர். அதன்பின்னர் 2,500ஆண்டு முந்தைய பானை ஓடுகள், பாண்டிய, சோழர்கால நாணயங்கள், ரோமானியர்கள் காலத்து கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், இரும்பு தாதுக்கள் போன்ற தொல்பொருட்களின் மூலம் மரபுகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.
   நிகழ்ச்சிக்கு ஏற்பாடு தினத்தந்தி தொண்டி செய்தியாளர் திரு மணிமாறன் அவர்கள். 





No comments:

Post a Comment