Pages

Wednesday 25 May 2016

மதுரை மீனாட்சிபுரத்தில் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பயிற்சி முகாம்






திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் மதுரை அருகிலுள்ள மீனாட்சிபுரத்தில், அதன் தொன்மைச் சிறப்புகள் பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் திருமதி மு.பிரேமா அவர்களின் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் 21 பேர் தேர்வு செய்யப்பட்டு 27.09.2015 அன்று மீனாட்சிபுரம் அழைத்துச் செல்லப்பட்டனர். 
     கழுகுமலை என்றும் ஓவாமலை என்றும் மக்களால் அழைக்கப்படும் மீனாட்சிபுரம் மலையில் இயற்கையாக அமைந்த ஐந்து குகைகள் உள்ளன. சமணர்கள் இக்குகைகளை வாழிடங்களாகப் பயன்படுத்தி சமணமதத்தை வளர்த்துள்ளனர். சமணத்துறவிகள் தவம் செய்த இடமான இக்குகைகளில் 80 கற்படுக்கைகள் உள்ளன. 
இக்குகைகளில் கி.மு. 300 ஐச் சேர்ந்த ஆறு தமிழ்ப்பிராமி கல்வெட்டுக்கள் உள்ளன. தமிழகத்திலுள்ள மிகப்பழமையான கல்வெட்டுகளில் இக்குகைகளில் காணப்படும் கல்வெட்டுக்களும் ஒன்று.
இக்குகைகளில் 80 கற்படுக்கைகள் உள்ளன. சமணத்துறவிகள் தவம் செய்த இடமாக இது உள்ளது. இம்மலை 2300 ஆண்டுகளுக்கு முன்பு  பள்ளிகூடமாக செயல்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு குகையில் 60 பேர் அமர்ந்து பாடம் கேட்பதற்குரிய வசதி உள்ளது. அதில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர் அமரும் வகையில் இயற்கையாகவே கல் நாற்காலி ஒன்றும் அமைந்துள்ளது. இதை நேரில் பார்த்து மாணவர்கள் அதிசயத்தனர். 


இங்குள்ள கல்வெட்டுக்களில் நந்தஸிரியக்குவன் என்ற சமணத்துறவிக்கு முற்காலப் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் கற்படுக்கை அமைத்துக் கொடுத்த செய்தி உள்ளது. தமிழ்பிராமி எழுத்துக்களை மாணவர்கள் படிக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இங்குள்ள வழிபாட்டுக்கூடம் போன்ற ஒரு கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான செங்கல்களை மாணவர்கள் பார்வையிட்டனர். மன்றப் பொறுப்பாசிரியர் இராஜகுரு மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.
பயிற்சிக்குரிய ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் அன்பழகன், கணினி ஆசிரியர் அழகம்மாள் ஆகியோர் செய்திருந்தனர். 
.

 பழமுதிர்சோலை முருகன் கோயில் முன்பு 





No comments:

Post a Comment