கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று ஒரு பழமொழி வழக்கில் உள்ளது. கணவன் கல்லைப் போன்றோ புல்லைப் போன்றோ இருந்தாலும் பரவாயில்லை என்ற
பொருளில் தற்போது வழங்கப்படுகிறது. கல்லும், புல்லும் ஒரு பெண்ணுக்கு கணவன்
ஆக முடியுமா?
ஆனால் இதை கல்லானானாலும் (கல்லான் + ஆனாலும்) கணவன்; புல்லனானாலும் (புல்லன் + ஆனாலும்) புருசன் என பிரித்துப் பொருள்
கொள்ளவேண்டும்.
கல்லான், அதாவது படிக்காதவனா இருந்தாலும்
கணவனாயிருக்கும் தகுதி ஒருவனுக்கு இருக்கிறது. புல்லன், அதாவது கல்வி கற்றவன் (புல் என்றால் கல்வி எனவும் பொருளுண்டு)
என்றாலும் அவனுக்கு புருசன் ஆகின்ற தகுதி இருக்கிறது என்ற பொருளில் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கல்லான் என்பதன் எதிர்சொல்லாகவே புல்லன் இருக்கவேண்டும். அதுவே
பொருத்தமானதாக உள்ளது. படிக்காதவன் என்றாலும் படித்தவன் என்றாலும் வாழ்க்கைக்கு
அவன் துணைவன் என இதற்குப் பொருள் கொள்ளலாம்.
எனவே சரியான பழமொழி இதுதான்
“கல்லான் ஆனாலும் கணவன்; புல்லன்
ஆனாலும் புருஷன்”
சிறப்பு ஐயா
ReplyDelete