Ý
சித்தன்னவாசல் மலையின் கீழ்த்திசையில் உள்ள பாறையில்
இயற்கையாக அமைந்துள்ள குகை காணப்படுகிறது.
Ý
இக்குகை ஏழடிப்பாட்டம் என அழைக்கப்படுகிறது. இக்குகையில்
வழுவழுப்பான தலையணை போன்ற அமைப்புடன் கூடிய 17 கற்படுக்கைகளைக் காணலாம்.
Ý இவற்றுள் மிகப்பெரியதும், பழமையுமான படுக்கையில் தமிழ்க்
கல்வெட்டொன்று தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
Ý கி.மு.3-2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு எவுமி
நாட்டு குமட்டூர் பிறந்த காவிதி ஈதன்கு சிறுபோசில் இளையான் செய்த அதிட்டானம் (கோயில்) என்று கூறுகிறது.
Ý
இதைத்தவிர கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க்
கல்வெட்டு ஓன்றில் கடுந்தவம் புரிந்த சமணத் துறவிகளைப் பற்றியும் அறியமுடிகிறது.
Ý
இந்த இடம் சமணத்துறவிகள் தவம் மேற்கொண்ட இடமாக உள்ளது.
இங்கு கி.மு.3 ஆம் நூற்றாண்டு முதல் தவம்
இருந்த சமணப்பெரியார்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
Ý
தற்போதைய கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்தும்
சமணத்துறவிகள் இங்கு வருகை தந்துள்ளார்கள்.
SITHANNAVASAL HILLOCK 17 STONE BEDS |
SITHANNAVASAL HILLOCK STONE BED INSCRIPTIONS |
No comments:
Post a Comment