Darasuram Temple front view |
· தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தின் அருகில் இருக்கும் இவ்வூரில்
உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் ஒரு உலகப் பாரம்பரியக் களம் ஆகும். தஞ்சை பெரிய கோயிலைக்
கட்டிய இராஜராஜசோழனின் கொள்ளுப் பேரனான இரண்டாம் இராஜராஜனால் 12-ஆம்
நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக
விளங்குகிறது.
· கட்டிடக் கலை, சிற்பக்கலை, கலை நுணுக்கம் ஆகிய அனைத்து
சிறப்புக்களும் கொண்ட ஒரு கோயில் தாராசுரம்.
· வெளியிலுள்ள அழகிய நந்தியில்
இருந்து கோயிலிற்குள் இருக்கும் தூண்கள் ஒவ்வொன்றிலும் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள்
வரை அனைத்தும் சிறப்பானவை.
· தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும்
சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப்
படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.
·
யானை, காளை ஆகிய இரண்டையும் இணைத்து ஒன்றின் தலையில்
மற்றொன்றைக் காணும் தத்ரூப சிற்பமும், நடன மாது ஒருவர் இரண்டு தாள
வாத்தியக்காரர்களோடு இணைந்து ஒன்றாக ஆடுகின்றனர், ஆனால் 4 கால்களோடு! இப்படியொரு சிற்பம். இக்கோயிலின் மண்டபத்திற்கு ஏறிச்
செல்லும் படியில் குதிரைகள், யானைகள் இரு
பக்கங்களிலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின்
சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப்
பார்க்கப்படுகிறது. அத்தனை அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
·
கோயிலின் முன் உள்ள பலி பீடத்தைத்
தட்டினால் பல விதமான ஓசைகள் கேட்கின்றன. இவை இசைத்தூண்கள் ஆகும்.
· இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.
I AM HAPPY TO BE A TAMILIAN AND VERY HAPPY TO SEE THESE HISTORICAL HERITAGES,I WISH U ALL THE BEST FOR YOUR CULTURAL AWARENESS & SERVICE
ReplyDelete