புதுக்கோட்டை மன்னர் தான் தமிழகத்தில் முதன்
முதலாக கார் வாங்கினார். PACKARD CAR என அழைக்கப்பட்ட அந்த கார் 1901 இல் வாங்கப்பட்டது. அந்த
கார் இயங்க ஆஸ்திரேலியாவில்இருந்து பெட்ரோல் வரவழைக்கவும் ஆங்கில அரசு அனுமதி வழங்கியிருந்தது.
முதல் கார் மட்டுமன்றி முதல் பேருந்தும்
புதுக்கோட்டையில் தான் ஓடத் தொடங்கியது. தமிழ்நாட்டில் முதலில் ஓடிய பேருந்து
பிரான்சு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்குச்
செல்லும் பாதையில் இந்த பேருந்தின் உபயோகத்திற்காக ஆங்காங்கே பெரிய தொட்டிகளில்
தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். இந்தப் பேருந்தை வாங்கியவரும் புதுக்கோட்டை
மன்னர்தான் வாங்கிய ஆண்டு 1904.
1904 ஆம் ஆண்டில் முதன் முதலாக புதுக்கோட்டையில்
இருந்து திருச்சிக்கு வாகனங்கள் விடப்பட்டன. இதைத் தொடர்ந்து தஞ்சாவூருக்கும் அறந்தாங்கிக்கும்
விடப்பட்டன.
எங்க புதுக்கோட்டை பற்றி இவ்வளவு செய்தி இருக்கா? தொடரட்டும் உங்கள் பணி
ReplyDelete