பத்மநாதபுரம் அரண்மனையில் பூமுனைப்போதிகை |
கோயில்களில்
நீங்கள் தூண்கள் பார்த்திருப்பீர்கள்.
அத்தூண்களின் மேல் பகுதி தூணின் உச்சியில் சென்று சேரும் இடத்தில் காணப்படும்
பூ போன்ற சிற்பங்களை போதிகை என
அழைப்பார்கள் . தூணின் தலைப்பகுதியாக அமைவது போதிகை. பலகைக்கு மேலே வீரகண்டமும் அதற்குமேல் போதிகையும் அமைப்பது சிற்ப நூல் மரபாகும். தூண்களில் பூச்சரம் போல அமைக்கப்படும் சிற்ப வேலைப்பாட்டைக் காட்டிலும், மேற்கட்டடத்திற்கும்
தூணின் தலைப்பகுதிக்கும் இடையே அமைந்திடும் போதிகை மிகச் சிறப்புடையது.
கோயில் கலைப்பாணியையும் காலத்தையும் கணக்கிடப் போதிகை பயன்படும் .
அழகர் கோயில், திருமெய்யம், திருக்குறுங்குடி, பெருங்குளம் ஆகிய கோயில்களில்
போதிகை சிறுமொட்டு வடிவத்தில் காணப்படுகிறது. இது பிற்காலப் பாண்டியரது பாணியாகும்.
மன்னார்கோயில், திருக்கோளூர், தாடிக்கொம்பு, கிருஷ்ணபுரம், நாங்குனேரி ஆகிய
கோயில்களில் ஆப்புகள் நீட்டிய வெட்டுப்
போதிகை இடம் பெற்றுள்ளது; இத்தகையவை
சோழர்களுடைய அமைப்பாகும்......
ஆண்டாள் கோயில், வடபத்திர
சாயிகோயில், அரவிந்த போசனன், ஸ்ரீநிவாசன், திருக்கோட்டியூர், திருப்புல்லாணி, கூடலழகர், திருமோகூர், தென்திருப்பேரை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய கோயில்களில்
விசயநகர நாயக்கர் கலைப் பாணியைச் சேர்ந்த போதிகை அமைப்பான பூமுனைப் போதிகை இடம் பெற்றுள்ளது.
எனவே, போதிகை அமைப்பை வைத்துப் பார்க்கின்றபோது அடிக்கொம்பு, கிருஷ்ணாபுரம், திருமோகூர் போன்ற
விசயநகர நாயக்கர் கலைப்பாணியைச் சேர்ந்த கோயில்களில் கூட முற்காலச் சோழர்
கலைப்பாணியில் அமைந்த வெட்டுப் போதிகைகள் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment