சித்தன்னவாசல் ஓவியங்கள் சுதை ஓவிய முறையில் (Fresco Technique) தீட்டப்பட்டுள்ளன. இம்முறையில் முதலில்
சுவர்ப்பகுதி மேடு பள்ளம் இல்லாமல் சமமாக இருப்பதற்காக சுவர் மீது நெல் அளவுக்குச்
சுண்ணாம்புச் சாந்தைப் பூசுவார். சலித்து எடுக்கப்பட்ட பூமணல், வைக்கோல், கடுக்காய் முதலியவற்றுடன் கலந்து வெல்லத்
தண்ணீர் அல்லது பனஞ்சாற்றுடன் அரைத்த இச்சாந்து சுவரில் கெட்டியாய்ப் பிடித்துக்
கொண்டு விடும்.
ஈரம் காய்வதற்கு முன்னரே மஞ்சள் கிழங்கைக்
கொண்டு ஓவியத்திற்கான கோடுகள் வரைந்துகொள்வான் ஓவியன். சுண்ணாம்புடன் கலந்த மஞ்சள்
நிறம் மாறிச் சிவப்பாகத் தோன்றுவதுடன், பின்னாளில் அழிந்து போகாமல் விளங்கும்
தன்மையையும் பெற்றுவிடும். புனையா ஓவியம் என்ற இந்தக் கோடுகளை முதலில் வரைந்து
கொண்டுதான் பிறகு வண்ணங்களைத் திட்டுவான். சிவப்பு, மஞ்சள், வெள்ளை, நீலம், பச்சை,
கருப்பு ஆகிய நிறங்களைக் கொடுக்கும் பச்சிலை வண்ணங்களையே உபயோகிபபர்.
No comments:
Post a Comment