திருப்புல்லாணி எஸ்.எஸ்.ஏ.எம். அரசு மேல்நிலை
பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில், தமிழக பாரம்பரியம்
பற்றிய புகைப்படக் கண்காட்சி 06.09.2012 அன்று நடைபெற்றது. கண்காட்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. வே.பென்சாம்
துவக்கி வைத்தார். கண்காட்சியில் தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான பாண்டிய
மன்னர்களால் அமைக்கப்பட்ட பிள்ளையார்பட்டி, சித்தன்னவாசல், திருமயம்,கழுகுமலை,
கீழக்குயில்குடி, குடுமியான்மலை, ஆகிய ஊர்களில் உள்ள குடைவரைக்கோயில்கள் பற்றிய செய்திகளுடன்
புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.
|
கண்காட்சியை தலைமையாசிரியர் திறந்து வைக்கிறார் |
|
கண்காட்சியை தலைமையாசிரியர்பார்வையிடுகிறார் |
கண்காட்சியை இரகுவரன், இராஜ்குமார், அகிலா, நித்யா, மனோஜ், கவுரிசங்கர், காவேரி, சாஜிதாபேகம், லைலத்து ஜப்ரீன், தினேஷ், பூஜா, நந்தினி, செல்வப்ரியா,
வேல்முருகன், ஜெயராமன், கோகிலா, அம்ரின் நிஷா, ஹரிஹரன், மங்களராசு, கருப்புசாமி ஆகிய
மாணவர்களுடன், மன்றப் பொறுப்பாசிரியர் திரு. வே.இராஜகுரு, முதுகலை ஆசிரியர்கள் திரு.இ.சண்முகநாதன், திரு.கருணாநிதி, திரு. நவநீதகிருஷ்ணன்
ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். பள்ளி
மாணவ, மாணவியர் கண்காட்சியை கண்டு களித்தனர்.
|
முதுகலை ஆசிரியர் சண்முகநாதன், கருணாநிதி பார்வையிடுகிறார் |
|
மன்ற பொறுப்பாசிரியர் இராஜகுரு மாணவர்களுக்கு விளக்குகிறார் |
|
பட்டதாரிஆசிரியர் நவநீதக்கிருஷ்ணன் பார்வையிடுகிறார். |
|
கண்காட்சி பற்றி மாணவர்களின் கருத்துக்கள் |
|
மாணவர்கள் பார்வையிடுகிறார்கள் |
|
மாணவியர் பார்வையிடுகிறார்கள் |
|
மாணவ மாணவியர் பார்வையிடுகிறார்கள் |
|
மாணவி பூஜா,கருப்புசாமி விளக்குகிறார்கள் |
No comments:
Post a Comment