Û
இங்குள்ள கடற்கரைக் கோயில் உலகப்புகழ் பெற்றது. இது இரண்டு
சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700 - 728க்கு இடைப்பட்ட காலத்தில்
கட்டப்பட்டவை
Û இயற்கையான பாறையைச் செதுக்கி
தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில் தேர் போல காட்சியளிப்பதால் அவை இரதம்
எனப்படும். முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (கி.பி. 630 - 668) அரிய
படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல்
கோயில்கள் மற்றும் சில விலங்கு சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி
தெற்கிலிருந்து வடக்காக சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.
Û சுமார் 30மீட்டர் உயரம், சுமார் 60மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே
அருச்சுனன் தபசு என்றழைக்கப்படுகிறது.
Û கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில்
உள்ள குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. மகிஷாசுரமர்த்தினி
என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன்
தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது.
Û
யுனெஸ்கோவால் (UNESCO) இது உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment