தமிழ்நாடு
அரசு தொல்லியல்துறை, இராமலிங்க விலாசம் அரண்மனை மற்றும் அகழ்வைப்பகம் சார்பில் உலக
மரபு வார விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கருத்தரங்கம்
நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் சுமதி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை
தலைவர் கீதா மாணிக்க நாச்சியார் முன்னிலை வகித்தார். மாணவி தேன்மொழி வரவேற்றார். இராமநாதபுரம் தொல்லியல் அலுவலர் ம.சுரேஷ் தமிழக
அகழாய்வுகள் என்ற தலைப்பிலும், இராமநாதபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் வி.சிவக்குமார் அருங்காட்சியகவியல் பற்றியும், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு
மன்றச் செயலர் வே.இராஜகுரு இராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் தடயங்கள் பற்றியும் பேசினர்.
மாணவி இராமவள்ளி நன்றி கூறினார். தமிழ் துறை கௌரவ விரிவுரையாளர்கள் கவிதா, அருணா பிரபா
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நாளிதழ் செய்திகள்
தொடர்ந்து உங்கள் பதிவுகளைப் பார்த்து வருகிறேன். உங்கள் அமைப்பின் செயல்பாடும், மாணவர்களின் ஈடுபாடும் போற்றத்தக்கவகையில் உள்ளன. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete