உலகப் பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம்
மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு
மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் தொல்லியல் கருத்தரங்கமும் கண்காட்சியும் 23.11.2021 அன்று
நடைபெற்றது.
உதவி தலைமையாசிரியர் இ.சண்முகநாதன் தலைமை வகித்தார். 9-ம் வகுப்பு மாணவி ந.அல்ஃபஷிகா வரவேற்றார். மன்றத்தின் செயலர் வே.ராஜகுரு முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் கருத்தரங்கத்தையும் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார்.
கருத்தரங்கில் உலகப் பாரம்பரிய வாரம் குறித்து தை.அஸ்மியா பானு, முகவை பெயர்க்காரணம் குறித்து ஜீ.ஹரிதா ஜீவா, கோபெக்லி தேபே குறித்து ப.பானு, பெருவழிகள் குறித்து ஜெ.சுஜிதா, சீனநாட்டுப் பானை ஓடுகள் குறித்து சு.பாலா, ஆசிரியம் கல்வெட்டுகள் குறித்து ச.பிரியதர்ஷினி ஆகியோர் பேசினர். 9-ம் வகுப்பு மாணவன் தே.டேவிட் லிவிங்டன் நன்றி கூறினார். மு.ஜெயரஞ்சனி, த.ஹில்மியா ஹபிபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
பின்பு நடந்த கண்காட்சியில் துருக்கி நாட்டிலுள்ள உலகின் முதல் கோயிலான கோபெக்லி தேபே, வணிகப் பெருவழிகள், ஊருக்குப்
பாதுகாப்பு தரும் பாடிகாவலர்கள்
பற்றிய ஆசிரியம் கல்வெட்டுகள்
ஆகியவற்றின் படங்கள், போர்சலைன், செலடன் வகை சீனப்பானை
ஓடுகள் ஆகியவை கண்காட்சியில் இடம்பெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
ஓவிய ஆசிரியர் க.அன்பழகன், மாணவர்கள் முவித்கண்ணன்,
சு.முனீஸ்வரன் செய்திருந்தனர்.
நாளிதழ் செய்திகள்
மாணவர்கள் பேசிய காணொளிகள்
No comments:
Post a Comment