இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் 08.03.2021 அன்று நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி தலைமை வகித்து பேசியபோது, மொழித்திறனை வளர்த்துக்கொள்ள மாணவிகள் கூடுதலாக வேறு மொழிகளையும் கற்றுக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முதலாமாண்டு மாணவி கீர்த்தனா தேவி அனைவரையும் வரவேற்றார். ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் சகினா சாலிகு அறிமுக உரையாற்றினார். எலக்ட்ரானிக்ஸ் துறைத்தலைவர் இராஜேஸ்கண்ணன், வேதியியல் துறைத்தலைவர் முத்தாலீஸ்வரி, கௌரவ விரிவுரையாளர் முனைவர் முகம்மது ஷிரின் ஷாஃபியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரும், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலருமான வே.இராஜகுரு சொற்கள் வழி வரலாறு என்ற தலைப்பில் பேசியபோது, வேர்ச்சொல் ஆய்வு, ஆங்கிலத்தில் உள்ள தமிழ் சொற்கள், சொற்களின் வழியே அறியும் வரலாறு, ஊர்களுக்கு பெயர் வைக்கும் முறை, கல்வெட்டுகளில் காணப்படும் சில சொற்கள், இராமநாதபுரம், முகவை ஆகியவற்றின் பெயர்க்காரணம் ஆகியவை பற்றிக் கூறினார். இரண்டாமாண்டு மாணவி கீர்த்தியாகினி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை கௌரவ விரிவுரையாளர்கள் கீதப்பிரியா, முத்துப்பிரியாள், சண்முகப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.
நாளிதழ் செய்திகள்
No comments:
Post a Comment