ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து இணையவழியில் டெலிகிராம் செயலி மூலம் 27.10.2020 முதல் 31.10.2020 வரை 5 நாட்கள் கல்வெட்டு பயிற்சி நடத்தின. இப்பயிற்சியில் கி.பி.13 முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலான தமிழ் கல்வெட்டுகளின் அமைப்பு, எழுத்து, எண், குறியீடுகள் பற்றி படங்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டது. மெய்க்கீர்த்தி, கோனேரின்மை கொண்டான், ஆசிரியம், கல்லறைக் கல்வெட்டுகள் குறித்தும் விளக்கப்பட்டது. ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் 31 பேர் இப்பயிற்சியில் கலந்து கொண்டு கல்வெட்டுகளை எழுதவும், படிக்கவும் பயிற்சி பெற்றனர். பயிற்சியை நடத்திய ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் காப்பாட்சியர் வி.சிவகுமார் நினைவுப்பரிசு வழங்கினார். பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.
நாளிதழ் செய்திகள்
No comments:
Post a Comment