Pages

Saturday 25 November 2017

உலக மரபு வார விழாவை முன்னிட்டு மாணவர்களே மாணவர்களுக்கு வழங்கிய கல்வெட்டு பயிற்சி - வே.இராஜகுரு





ஆண்டுதோறும் நவம்பர் 19 முதல் 25 வரை  உலக மரபு வாரவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோயிலில் மாணவர்களே, மாணவர்களுக்கு கல்வெட்டு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது.  

சென்ற ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் உலக மரபு வாரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கல்வெட்டு பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பத்தாம் வகுப்பு மாணாக்கர்கள் மு.விசாலி, மு.அபிநயா, பா.அபர்ணா, கு.சினேகா, செ.விஜய், ப.ராஜ்கண்ணா, கோ.ராஜபாண்டியன் ஆகியோர் பயிற்சி பெற்றனர்.
பின்பு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் சார்பில் திருப்புல்லாணி, புல்லுகுடி, நரிப்பையூர், அறுநூற்றுமங்கலம் ஆகிய ஊர் கோயில்களில் உள்ள  கல்வெட்டுகளை படிஎடுத்து ஆவணப்படுத்தும் நிகழ்வுகளில் இம்மாணவர்களும் தொடர்ந்து பங்கேற்றனர். பிற்கால தமிழ், பிராமி ஆகிய எழுத்துகளைப் படிக்க இவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 


இவர்கள் திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த எட்டாம், ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகள் 27 பேருக்கு கல்வெட்டைப் படிஎடுப்பது, படிப்பது பற்றிய செயல்விளக்கப் பயிற்சி அளித்தார்கள். பிராமி எழுத்துகள் பற்றி விசாலியும், பிற்கால தமிழ் எழுத்துகள் பற்றி அபர்ணா மற்றும் சினேகாவும், தமிழ் எண்கள் பற்றி அபிநயாவும் கற்பித்தார்கள்.  

 கல்வெட்டு பயிற்சி கொடுத்த மாணவ மாணவியரை கோயில் விசாரணைதார் கண்ணன் பாராட்டினார். இப்பயிற்சிக்கு உரிய ஏற்பாடுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, செயலாளர் சோ.ஞானகாளிமுத்து ஆகியோர் செய்திருந்தனர். கல்வெட்டு பயிற்சி முகாமில் கருத்தாளராகவும், பங்கேற்பாளராகவும் கலந்து கொண்ட மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கருத்தாளர்கள்: பத்தாம் வகுப்பு மாணவர்கள்
செ.விஜய்
ப.இராஜ்கண்ணா
கோ.இராஜபாண்டியன்
மு.விசாலி
பா.அபர்ணா
மு.அபிநயா
கு.சினேகா

பயிற்சி பெற்ற மாணவர்கள் விவரம் :
எட்டாம் வகுப்பு  ‘அ’ பிரிவு
மு.சுதர்சன்
த.சந்துரு
பூ.லிட்டில்ராஜ்
பா.கஜேந்திரன்
பா.காளீஸ் குணால்
கு.மணிகண்டன்
தீ.லோகேஸ்வரன்
சி.தேவி
ஜெ.சுகுணா
ச.ஜாஸ்மின்
இரா.கோகிலா
ஒன்பதாம் வகுப்பு  ‘அ’ பிரிவு
பா.இராஜா
வ.கோவிந்த பிரகாஷ்
இரா.கோபிகா ராஜி
ஒன்பதாம் வகுப்பு  ‘ஆ’ பிரிவு
இர.யோகேஸ் பாண்டி
மு.திவ்யா
மு.ஆர்த்தி
இர.புவநிஷா
ச.கவிதா
மு.வைஷ்ணவி
ச.சாருமதி
அ.மரியம் சரிபா அப்ரின்
இரா.கீர்த்திகா
மு.காளீஸ்வரி
பத்தாம் வகுப்பு ‘இ’ பிரிவு
இரா.இரமேஷ் ஹரிகரன்
மு.ரோகித்
இரா.புவனேஸ்வரன்






நாளிதழ் செய்திகள் 









இணைய இதழ்கள்  
நக்கீரன் 
http://nakkheeran.in/Users/frmNews.aspx?N=202226 



விகடன்

https://www.vikatan.com/news/tamilnadu/108333-world-heritage-week-celebrated-in-ramnad.html




தந்தி  டிவி





No comments:

Post a Comment