கோபெக்லி தேபே (Göbekli Tepe) - துருக்கி நாட்டின், தென்கிழக்கு
அனதோலியா பிரதேசத்தில், சன்லூர்பா நகரத்திற்கு அருகில் உள்ள உலகின் மிகப் பழமையான கோவில். இது 15மீ உயரம், 300மீ சுற்றளவு கொண்ட
தொல்லியல் மேடு. கடல் மட்டத்திலிருந்து 760மீ உயரத்தில்
உள்ளது. கி.மு.10000 முதல் கி.மு.8000 வரையிலான காலத்தைச் சேர்ந்தது. 12 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இதை 2008-இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. இதை Potbelly Hill என ஆங்கிலத்தில்
அழைக்கிறார்கள். தொப்பை என்ற தமிழ்ச் சொல்லை தேபே என சொல்கிறார்களோ எனத்
தோன்றுகிறது.
இங்கு 20 அடி உயரமுள்ள T வடிவிலான கல்தூண்கள் 200க்கும் மேல் உள்ளன. இவை வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 20 வட்டங்கள் இங்கு உள்ளன. கற்தூண்களில் காளை, நரி, கொக்கு, காட்டுப்பன்றி போன்றவற்றின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு குலக்குறிக் கம்பமும் உள்ளது. மட்பாண்டங்கள், எழுத்து, சக்கரம் மற்றும் கருவிகள் இல்லாத காலத்தில் பல டன் எடையுள்ள கற்கள் மூலம் இந்த கோவில் எவ்வாறு கட்டப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை குமரிக்கண்ட அழிவுடன் தொடர்புடைய நினைவுச் சின்னமாக இருக்கலாம்.
No comments:
Post a Comment