நமது
பண்பாடு மற்றும் பாரம்பரியச் சின்னங்களைப் பற்றி தெரிந்துகொண்டு அவற்றை போற்றிப் பாதுகாக்கும் மனப்பான்மையை
மாணவர்கள், இளைஞர்கள்,
பொதுமக்களிடம்
ஏற்படுத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19
முதல்
25 வரை உலக பாரம்பரிய வார
விழா கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் ‘இராமநாதபுரம் மாவட்டப் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி 21.11.2019 அன்று நடைபெற்றது. மன்றத்தின் செயலாளர் வே.இராஜகுரு தலைமை தாங்கினார். 9-ஆம் வகுப்பு மாணவன் ச.கிருஷ்ணராஜன் அனைவரையும் வரவேற்றார்.
உதவி தலைமை ஆசிரியர் இ.சண்முகநாதன் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசுகையில், வரலாறு
பண்பாடு ஆகியவை அதைத் தெரிந்தவர்களால் தான் அடுத்த தலைமுறைக்கு பரப்பப்படுகிறது. பண்பாடு
காப்பதில் பெண்களே சிறந்து விளங்குகிறார்கள். பாரம்பரியச் சிறப்பைத் தெரிந்துகொண்டு
அதை போற்றிப் பாதுகாக்கவேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
கண்காட்சியில்
மாவட்டத்தில் புதிதாக கண்டெடுக்கப்பட்டுள்ள புதிய, பழைய, கற்கால கருவிகள், சூலக்கல், திருவாழிக்கல், காசுகள், நவகண்டம், எல்லீஸ் கல்லறைக் கல்வெட்டு, கழுமரம், திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை, ராமேஸ்வரம் உள்ளிட்ட கோயில்கள், பறவைகள் சரணாலயங்கள், பாரம்பரிய தாவரங்கள், பொந்தன்புளி மரம், காரங்காடு
சூழியல் பூங்கா, அரியமான், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் உள்ள கடற்பசு உள்ளிட்ட அரிய விலங்குகள், கமுதி, ராமநாதபுரம், திருப்புல்லாணியில் உள்ள
கோட்டைகள், அரண்மனைகள், ஓரியூர், இராமநாதபுரத்தில் உள்ள கிருத்துவ தேவாலயங்கள், ஏர்வாடி தர்கா, நரிப்பையூர் முஸ்லிம் பள்ளிவாசல், பௌத்தம்,
சமண மதத் தடயங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
நிகழ்ச்சியில்
7-ஆம்
வகுப்பு மாணவர்கள் த.ஹில்மியா ஹபீபா, அ.ஜெயஎல்சியா, செ.சாலினி, வி.பத்மபிரியா, மு.ஜெயரஞ்சனி, பு.திவ்யபாரணி, ப.நூருல் பர்கானா, தே.டேவிட் லிவிங்டன், நா.அபிஷேக், வை.வைநவின் ஆகியோர் படங்களில்
உள்ள தகவல்களை விளக்கிக் கூறினார்கள். 9-ஆம் வகுப்பு மாணவன் த.முகம்மது பாஷில் நன்றி கூறினார். கண்காட்சியை பள்ளி மாணவர்கள் அனைவரும் பார்த்து அறிந்துகொண்டனர்.
நாளிதழ் செய்திகள்
கண்காட்சி தொகுப்பு
No comments:
Post a Comment