மலைநாடு துரியோதனன் கோவில் அல்தரை |
அல்தரா என்பதற்கு தமிழில் அல்தரை - தரை இல்லை உயரமானது என்பது
பொருள். இது கேரளாவில் உள்ள மலைப்பகுதி
கோவில்களில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. இது லிங்கத்தின் ஆவுடையார் போன்ற தோற்றத்தில் உள்ளது.
பாண்டிய நாட்டு ஆவுடை சதுர வடிவிலும், சோழ நாட்டு
ஆவுடை வட்ட வடிவிலும், சாளுக்கிய நாட்டு ஆவுடை நீள்வட்ட வடிவிலும் இருக்கும். சதுர
வடிவ ஆவுடையின், நடுவில் கந்து இணைந்த வடிவமாக பாண்டிய
நாட்டுக் கோவில்களில் உள்ள லிங்கங்கள் காணப்படுகின்றன.
அல்தரா என்ற சொல்லே althara -
altar என ஆங்கிலத்தில் வழக்கில் உள்ளது. கிறிஸ்தவ, யூத மத வழிபாட்டு இடங்களில் உள்ள இது போன்ற இடமும் altar - பலிபீடம் எனப்படுகிறது. கேரளாவில் அல்தரை எனப்படும் இடங்கள் மேற்குத்
தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படுகிறது. இங்கு துரியோதனன், சகுனி உள்ளிட்டோருக்கும் இது போன்ற அமைப்பில் கோயில்கள் உள்ளன. இவை
தற்போதும் மக்கள் வழிபாட்டில் உள்ளன. இது போன்று உலகம் முழுவதும் தோன்றி வளர்ந்த
அனைத்து மதங்களிலும் தமிழர்களின் அடையாளங்கள் உள்ளன.
No comments:
Post a Comment