Pages

Saturday 11 July 2020

தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர், மாணவிக்கு இராமநாதபுரம் எஸ்.பி பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவி ஹரிதா ஜீவா கல்வெட்டுகள் பற்றிய சில சுவையான தகவல்கள் என்ற தலைப்பில் பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பேசியதன் காணொளியை ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் டிவிட்டரில் பார்த்திருக்கிறார்.


அவர் பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு, பள்ளி மாணவ மாணவியருக்கு தொல்லியல், கல்வெட்டுகள், கோவில் கட்டடக்கலை பற்றி பயிற்சி அளித்து அவர்களை தொல்லியல் ஆர்வலர்களாக உருவாக்கி வருவதை அறிந்து அவரையும் மாணவி ஹரிதா ஜீவாவையும் நேரில் சந்தித்து பாராட்ட விரும்பினார்.

இதன் பேரில் ஆசிரியர் வே.இராஜகுரு மற்றும் மாணவி ஹரிதா ஜீவா ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை நேரில் சந்தித்தனர். மாணவியை கல்வெட்டுகள் பற்றிப் பேசச் சொல்லி முழுவதுமாகக் கேட்டறிந்தார். இதில் ஆர்வம் வந்ததன் காரணம், எதிர்காலத்தில் என்ன படிக்க விரும்புகிறார் என்பதையும், பெற்றோர் தொழில் பற்றியும் கேட்டறிந்தார். அரசுப்பள்ளியில் பயிலும் மாணவியை பாராட்டி ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து இதுபோன்று ஆர்வமுடன் செயல்படக் கேட்டுக்கொண்டார்.

வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்தது பற்றியும், பள்ளி மாணவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து தேடித்திரிவோம் வா என்ற  நூல் வெளியிட்டதைப் பற்றியும், மரபு நடை நிகழ்வுகள் மூலம் பொதுமக்களுக்கு வரலாற்றுச் சின்னங்களின் சிறப்புகளை நேரில் காணச் செய்து வருவதைப்  பற்றியும் ராஜகுரு காவல் கண்காணிப்பாளரிடம்  விவரித்தார். இதனால் மனம் நெகிழ்ந்த காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆசிரியர் ராஜகுருவுக்கும் மாணவி ஹரிதா ஜீவாவுக்கும் பரிசு வழங்கிப் பாராட்டினார். மாவட்டத்தில் உள்ள பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க உரிய உதவிகள் செய்வதாகத் தெரிவித்தார்.


மாணவி ஹரிதா ஜீவாவிடம் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் அவர்கள் உரையாடும் காணொளி


நாளிதழ் செய்திகள்





No comments:

Post a Comment