Pages

Saturday 14 September 2019

திருப்புல்லாணி அரசு பள்ளியில் மாணவர்கள் நடத்திய கல்வெட்டுகள் அறிவோம் பயிலரங்கம்




இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் கல்வெட்டுகள் அறிவோம் பயிலரங்கம் மன்றத்தின் செயலர்  வே.இராஜகுரு தலைமையில் 25.07.2019 அன்று நடைபெற்றது. எட்டாம் வகுப்பு மாணவன் து.மனோஜ் அனைவரையும் வரவேற்றார்.


கல்வெட்டுகளில் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், எண்கள் ஆகியவை பல்வேறு நூற்றாண்டுகளில் எவ்வாறு வளர்ச்சி அடைந்து தற்போதைய வரிவடிவம் பெற்றன என எட்டாம் வகுப்பு மாணவிகள்  வி.டோனிகா, க.அபிராமி, மு.பிரவீணா ஆகியோர் பிற மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.  


7ஆம் வகுப்பு மாணவிகள் ச.பிரியதர்ஷினி, ஜீ.ஹரிதா ஜீவா ஆகியோர்  கல்வெட்டுகளின் அமைப்பு, அவை பற்றிய சில சுவையான தகவல்கள் பற்றியும், ஒன்பதாம் வகுப்பு மாணவன் த.முகம்மது பாசில் கல்வெட்டுகளில் காணப்படும் சில சொற்கள் பற்றியும் பேசினர். 7ஆம் வகுப்பு மாணவன் செ.கார்த்திகேயன் நன்றி கூறினார். மாணவிகள் ஜெ.சுஜிதாஸ்ரீ, சே.ஆனந்தி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக திருப்புல்லாணி ஆசிரியர் பயிற்றுநர் வேல்சாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் தே.டேவிட் லிவிங்டன், .முகம்மது சைத், சீ.சீனி முகைதீன் இம்ரான், சு.முனீஸ்வரன், மு.சண்முகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப்படிகளை மாணவர்கள் பார்த்து, படித்து அறிந்து கொண்டார்கள்.

நாளிதழ் செய்திகள் 

 





 

 காணொளிகள் 



 

 

 

No comments:

Post a Comment