Pages

Saturday 14 September 2019

திருப்புல்லாணி அரசு பள்ளியில் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பற்றிய புகைப்படக் கண்காட்சி




இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் தமிழ்நாட்டில் உள் ப் பாரம்பரியச் சின்ங்ள் என்ற தலைப்பில் காணொளி மற்றும் புகைப்க் கண்காட்சி 05.09.2019 அன்று நடைபெற்றது. மன்றத்தின் செயலாளர்  வே.இராஜகுரு தலைமை வகித்தார். 7-ம் வகுப்பு மாணவன் மு.சண்முகராஜ் அனைவரையும் வரவேற்றார்.


தலைமையாசிரியர் கூ.செல்வராஜ் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில் “உலக அளவில் தமிழகத்தின் பாரம்பரியச் சின்னங்கள் கவனம் பெறுவதற்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம் உதவுகிறது. இவை தமிழர்களின் கோயில், சிற்பம், ஓவியக்கலையின் சிறப்பிற்கு சான்றாக உள்ளன.  மேற்குத் தொடர்ச்சி மலை இயற்கைப் பாரம்பரியச் சின்னமாகும்” என்றார்.

கண்காட்சியில் மாமல்லபுரம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம், நீலகிரி மலை ரயில், மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவை பற்றிய  புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மு.பிரவீணா, சே.ஆனந்தி, .அபிராமி, தி.திவின்பிரியா, து.மனோஜ், மு.யோகாஸ்ரீ ஆகியோர்   இவை பற்றிய தகவல்களைக் கூறினர். 9-ம் வகுப்பு மாணவி பூ.சுமித்ரா நன்றி கூறினார்.

7-ம் வகுப்பு மாணவிகள் ஜீ.ஹரிதா ஜீவா, ச.பிரியதர்ஷினி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் முகம்மது சைத், கதிர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர். கண்காட்சியை பள்ளி மாணவ மாணவியர் பார்வையிட்டு அறிந்து கொண்டனர். 


நாளிதழ் செய்திகள்










காணொளி

 

 




No comments:

Post a Comment