வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் ஆகியவற்றை
மாணவர்கள் தெரிந்துகொள்ளவும், பாதுகாக்கவும் ராமநாதபுரம்
மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 2010ஆம் ஆண்டு முதல் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது.
ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் பள்ளபச்சேரியைச் சேர்ந்த இரா.கோகிலா என்ற மாணவி தமிழி எழுத்துகளோடு, வட்டெழுத்துகளையும்
சரளமாக எழுதவும், பிற மாணவர்களுக்கு சொல்லித் தரவும் அறிந்துள்ளார்.
இவருடைய தந்தை ராமையா, தாயார் ராமு இருவரும் கூலி
வேலை செய்கிறார்கள்.
இம்மாணவி பற்றிய சிறப்புச் செய்தி மதுரை தினமலர், சேலம் தினமலர், குங்குமம் தோழி, தினமணி மகளிர் மணியில் வந்தது.
No comments:
Post a Comment