உலக பாரம்பரிய வாரவிழாவை
முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு
மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் பாரம்பரிய சிறுவர் விளையாட்டுகள்
விளையாடும் நிகழ்ச்சி 24.11.2018 அன்று நடைபெற்றது.
சிறுவர் சிறுமியரின் அறிவை வளர்த்து அவர்களை சிந்தித்து செயல்பட வைக்கும் பாரம்பரிய விளையாட்டுகளை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர்கள்
விளையாடி மகிழ்ந்திருந்தனர். தற்போது மறைந்துவரும் இத்தகைய விளையாட்டுகளை பள்ளியில் ஒய்வு நேரங்களில் விளையாடச் செய்வதன் மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறைந்து
அவர்கள் நன்றாகச் செயல்பட உதவும். இவ்விளையாட்டுகள் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒன்பதாம் வகுப்பு
மாணவி ச.ஹர்ஷினி அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமையாசிரியர்
கூ.செல்வராஜ் விளையாட்டை தொடங்கி
வைத்தார். இதில் கொல கொலையா முந்திரிக்கா, நொண்டி, பச்சக்குதிரை, தட்டாங்கல், தாயம், பூப்பறிக்க வருகிறோம், பூவரசு பீபீ, பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம்
ஆகிய சிறுவர் விளையாட்டுகளை மாணவ மாணவிகள் விளையாடிக் காட்டினர்.
ஒன்பதாம் வகுப்பு
மாணவி மு.பவித்ரா நன்றி கூறினார். மாணவி இரா.கோகிலா விளையாட்டுகள் பற்றிய வர்ணனைகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளை மன்றப் பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு, மாணவர்கள் முத்துமாரி,
அபுரார் அகமது, பானு, மனோஜ், ஜனார்தனன், முகம்மது
ஃபாஷில், ரித்திகா, சாலினி ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment