Pages

Sunday, 12 April 2026

ஆறும் மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள் தொல்லியல் ஆய்வாளர் தகவல்

 




ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓடும் குண்டாறும், செம்பு நிற மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள் என தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு தெரிவித்தார்.
ராமநாதபுரம் அருகேயுள்ள புதுக்கோயில், அரசு உயர்நிலைப் பள்ளியில் தொல்லியல் மரபு மன்றம் சார்பில் ‘வரலாற்று நோக்கில் ராமநாதபுர மாவட்டம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் கண்காட்சியும் நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியர் ம.மலைப்பாண்டி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் வழிவிட்ட அய்யனார் முன்னிலை வகித்தார். ஏழாம் வகுப்பு மாணவன் தி.துர்க்கேஷ் அனைவரையும் வரவேற்றார். தொல்லியல் மரபு மன்றச் செயலர் க.ராமச்சந்திரன் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றிக் கூறினார்.
திருப்புல்லாணி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, “ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப் பழமையான கீழைப் பழங்கற்கால கற்கோடரிகள் கமுதி குண்டாற்றுப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் நுண் கற்கருவிகள், இரும்புக் கால தொல் பொருட்களும் கிடைத்துள்ளன. இதன்மூலம் மிகப் பழமையான நாகரிகம் குண்டாற்றுப் பகுதியில் இருந்துள்ளதை அறிய முடிகிறது.
செம்பு நிறத்தில் வளமான மண் கொண்ட திருப்புல்லாணி, பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதிகள் கீழ்ச்செம்பில் நாடு, வடதலைச் செம்பில் நாடு, ஏழுர் செம்பில் நாடு என கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. அடி முதல் முடி வரை முழுவதும் கற்களால் கட்டப்பட்ட கோயிலை கற்றளி என்பர். இம்மாவட்டத்தில் சாயல்குடி அருகிலுள்ள மாரியூர், திருமாலுகந்தான்கோட்டை, நயினார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோயில்கள் கற்றளிகள் ஆகும். வணிகம், இயற்கைத் துறைமுகம், மண்வளம், கோயில், கல்வெட்டு, சமணம், பௌத்தம் என பலவற்றிலும் தமிழ்நாட்டில் அதிக தொல்லியல் தடங்கள் கொண்டதாக இம்மாவட்டம் விளங்குகிறது.” என்றார். ஏழாம் வகுப்பு மாணவி செ.ரியாரென்சி நன்றி கூறினார்.
பின்பு நடந்த கண்காட்சியில் மாவட்டத்தில் புதிதாக கண்டெடுக்கப்பட்ட பழைய, புதிய, நுண் கற்கால கருவிகள், பெருங்கற்கால தொல் பொருட்கள், கல்வெட்டுகளின் அச்சுப்படிகள், பாண்டியர், சோழர், சேதுபதிகள், பொந்தன் புளி, உகாய் மரம், கோயில்கள், இஸ்லாம், கிறித்தவம், சமணம், பௌத்தம் போன்ற தலைப்புகளில் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.









தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட தொண்டி தொல்லியல் ஆய்வாளர் தகவல்

  




 இராமநாதபுரம் மாவட்டத்திலேயே, தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊராக தொண்டி திகழ்வதாக தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு தெரிவித்தார்.

    திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொல்லியல் மரபு மன்ற மாணவர்கள், அகழாய்வு, கல்வெட்டை அறிந்துகொள்ள, தலைமையாசிரியர் செல்வராஜ் வழிகாட்டலில், களப்பயணமாக தொண்டிக்கு வந்தனர். இவ்வூர் சிவன், திருமால், தொண்டியம்மன் கோயில்கள், பழமையான பள்ளிவாசல், அகழாய்வு நடந்த இடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். கோயில் கல்வெட்டுகளை மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு மாணவர்களுக்கு படித்துக் காட்டி அதை படியெடுக்கும் முறைகளையும் கற்றுக் கொடுத்தார். தொண்டி பற்றி அவர் கூறியதாவது,
    இராமநாதபுரம் மாவட்டத்தில் இலக்கியச் சான்றுகள் அதிகம் உள்ள ஊராக தொண்டி விளங்குகிறது. 2200 ஆண்டு பழமையான கீழவளவு தமிழிக் கல்வெட்டு, தொண்டியைச் சேர்ந்த இலவோன் என்பவரைக் குறிப்பிடுகிறது. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தொண்டி, கொண்டல் காற்று, கானல், தில்லைச்செடி, நெய்தல் மலர், நெல்வயல், வெண்ணெல் ஆகிய சூழலைக் கொண்டு இராமநாதபுர மாவட்ட தொண்டி தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம், பாண்டிக்கோவை, நந்திக்கலம்பகம், யாப்பருங்கலக்காரிகை உரை ஆகியவற்றிலும் தொண்டி குறிப்பிடப்படுகிறது.
    சங்க காலம் முதல் துறைமுகப் பட்டினமாக இருந்த தொண்டியில் அகில், துகில், ஆரம், வாசம், கருப்பூரம் போன்ற ஜாவா, இந்தோனேசியா பொருள்கள் இறக்குமதியானதை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. இவை இங்கிருந்து மதுரை சென்றுள்ளன. சிதம்பரேஸ்வரர், உந்திபூத்தப் பெருமாள், நம்புதாழை நம்பு ஈஸ்வரர் ஆகிய கோயில்களிலும், கைக்களான்குளத்தின் நடுவிலும் பழமையான பாண்டியர் கல்வெட்டுகள் உள்ளன.
    தூய்மையான மாணிக்கக் கற்களுக்குப் பெயர்பெற்ற இலங்கையில் இருந்து வாங்கப்பட்டு அவை விற்கப்பட்ட பேட்டைகளாக தொண்டி, பெரியபட்டினம், காயல்பட்டினம் விளங்கியுள்ளன. இதனால் இவ்வூர்கள் பவித்திரமாணிக்கப்பட்டினம் எனப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். ஆசிரியர்கள் கலையரசி, தனலட்சுமி, ரவி, தனகுருபாலன் மாணவர்கள் 25 பேர் களப்பயணமாக வந்திருந்தனர்.










தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்கள் மாணவர்களுக்கு 'ஹெட்மாஸ்டர்கள்' நெருக்கடி - தினமலர் செய்தி

 


நன்றி தினமலர்...

கலைஞர் காலத்தில், செம்மொழி மாநாட்டுக்குப் பின் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை உருவாக்க 2010இல் அரசு உத்தரவிட்டது. பின் இந்த அரசு ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி கொடுத்து பள்ளி மாணவர்களுக்கு தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் மூலம் அவை சென்றடைய ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் பல மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கல்வி அலுவலர்கள் தன்முனைப்புடன் செயல்பட்டு வரும் ஆசிரியர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது வேதனையானது. குறிப்பாக பெண் ஆசிரியர்களை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி பயமுறுத்தும் நடவடிக்கைகள் கொடுமையானது.
கீழடி போன்ற தொல்லியல் தளங்கள் ஆசிரியர், மாணவர்கள் கண்டறிந்தது தான்.
அரசு நல்லது நடக்கவேண்டும் என்று திட்டங்களை உருவாக்குகிறது. ஆனால் செயல்படுத்துபவர்கள்....
'கல்யாண வீடா இருந்தா மாப்பிள்ளையா இருக்கணும். இழவு வீடா இருந்தா பிணமா இருக்கணும். மாலையும் மரியாதையும் எனக்குத் தான் கிடைக்கணும்னு' எஜமான் படத்தில் நெப்போலியன் பேசும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

'சிவகங்கை மாவட்டத் தொல்லியல்' கருத்தரங்கம்

 சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அழகப்பா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வரலாற்றுத்துறை சார்பில்  23.02.2026 அன்று நடைபெற்ற 'சிவகங்கை மாவட்டத் தொல்லியல்' என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கத்தில்  'தொல்லியல் தேடல்களில் கல்லூரி மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். 




பாண்டியர், சோழர் வரலாறு பேசும் இராதானூர் கல்வெட்டுகள்

 இராமநாதபுர மாவட்டம், இராசசிம்மமங்கலம் வட்டத்தில், ஆனந்தூர் அருகிலுள்ளது இராதானூர்.  கல்வெட்டில் இவ்வூர் திருக்கானப்பேர்க்கூற்றத்து பாளூர் அல்லது பெரும்பாளூரான இராசராசநல்லூர் எனப்படுகிறது. தொடக்கத்தில், பாளூர் என அழைக்கப்பட்ட இவ்வூர், பின்னர் முதலாம் இராஜராஜசோழன் பெயரால்  இராசராசநல்லூர் என நல்லூராக உருவாக்கப்பட்டுள்ளது. இராதானூரின் கிழக்கிலும், மேற்கிலும் இரு சிவன் கோயில்கள் உள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள திருவிருந்தீஸ்வரர் கோயிலில் ஐந்து கல்வெட்டுகளும்மேற்கு நோக்கி அமைந்துள்ள தில்லைவனேஸ்வரர் கோயிலில் நான்கு கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றை 1926இல் இந்தியத் தொல்லியல் துறையினர் படி எடுத்து ஆவணப்படுத்தியுள்ளனர். இராதானூர் சோழர் கால சிவன் கோயில்கள் பற்றிய கட்டுரை தினகரன் மதுரை பதிப்பு 03.03.2026 பழமை காப்போம் பகுதியில்....



School Students Discover 30,000-Year-Old Microliths near Virudhunagar






 Students from the Panchayat Union Middle School in Muthaneri, located in the Narikudi block of Virudhunagar district, have discovered microliths (small stone tools) estimated to be 30,000 years old.

            Through the school's functioning 'Heritage Club,' Headmaster K. Anbuvelan has been providing training to students on how to identify archaeological artifacts and inscriptions. As a result of this initiative, students—including Muthumurugan (5th grade); Akshaya, Vanishri, Mugilrajan, and Manikandan (6th grade); Rahul (7th grade); and Abi and Jenika (8th grade) conducted a field exploration near their homes and at the 'Pudukkanmai' (irrigation tank). During this survey, they discovered potsherds and stone tools, which they subsequently handed over to the Headmaster. The information provided by the Headmaster, V. Rajaguru, President of the Ramanathapuram Archaeological Research Foundation, personally inspected both the discovered stone tools and the site itself. Speaking on the matter, V. Rajaguru stated:

            The students have discovered a variety of artifacts, including microliths, iron ores, black-and-red potsherds, red potsherds, sling stone, potsherd bearing symbols, the spout, iron arrowheads and hopscotches. These artifacts date back to the Mesolithic period, the Iron Age, and the Medieval period of history.

            The Mesolithic period spans from approximately 38,000 BCE to 7,000 BCE. During this era, the inhabitants of these regions utilized small stone tools—known as microliths—crafted from relatively soft stones such as chert, quartz, and jasper, which are found locally in these areas. These artifacts were fitted onto the tips of wooden shafts and utilized for hunting purposes as arrowheads, small knives, and scrapers. These people lived in close proximity to rivers and streams. In this locality, traces of a stream or river that once altered its course can still be found. Microliths—small stone tools—have been discovered in the river basins of the Arjuna, Vaippar, Kruthumal, and Gundar rivers.

            black-and-red potsherds, sling stone and iron artifacts were items in use during the Iron Age, spanning the period from 4000 BCE to 700 BCE. The discovery of iron ores and iron arrowheads suggests that iron smelting activities may have been conducted at this site. Red potsherds date back to the Medieval Period (300 CE – 1300 CE). One particular Red potsherds bears stamped motifs depicting flower and bird.

            The archaeological artifacts unearthed by students have provided crucial evidence establishing that this locality was inhabited by humans as early as 30,000 years ago. Thus he stated.




Saturday, 11 April 2026

மாணவர்களின் நுண்கற்கருவிகள் கண்டெடுப்பு அமைச்சர் பாராட்டு

 எங்கள் ஆய்வுக்கு தொடர்ந்து மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கி வரும் மாண்புமிகு அமைச்சர் எங்கள் அன்பு அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் அன்பும். 

வே.இராஜகுரு, தலைவர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.


https://x.com/i/status/2034237165371380058

*நமது மண்ணின் தொன்மை வரலாற்றை மீட்டெடுக்கும் இளம் வேர்கள்*

*விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், முத்தனேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவச் செல்வங்கள் சுமார் 30,000 ஆண்டுகள் பழமையான நுண்கற்கருவிகள் (Microliths), இரும்புக்காலப் பானையோடுகள் உள்ளிட்ட அரிய தொல்பொருட்களைக் கண்டெடுத்துள்ளது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.*

*மாணவர்களிடம் வரலாற்றுத் தேடலை உருவாக்கிய பள்ளித் தலைமையாசிரியர் திரு. அன்புவேலன் அவர்களுக்கும், அதனை உறுதி செய்த தொல்லியல் ஆய்வாளர் திரு. ராஜகுரு அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். கீழடியைத் தொடர்ந்து நமது விருதுநகர் மண்ணும் பழம்பெரும் வரலாற்றைப் பேசும்!*


விருதுநகர் அருகே 30,000 ஆண்டு பழமையான நுண்கற்கருவிகளைக் கண்டெடுத்த பள்ளி மாணவர்கள்




    விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், முத்தனேரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 30,000 ஆண்டுகள் பழமையான நுண்கற்கருவிகளைக் கண்டெடுத்துள்ளனர்.

பள்ளியில் செயல்படும் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர் க.அன்புவேலன், தொல் பொருட்கள், கல்வெட்டுகளை அடையாளம் காண மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். இதன் எதிரொலியாக 5-ம் வகுப்பு முத்துமுருகன், 6-ம் வகுப்பு அக்‌ஷயா, வாணிஸ்ரீ, முகில்ராஜன், மணிகண்டன், 7-ம் வகுப்பு ராகுல், 8-ம் வகுப்பு அபி, ஜெனிகா ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகிலும், புதுக்கண்மாயிலும் கிடந்த பானை ஓடுகள், கற்கருவிகளை மேற்பரப்பாய்வில் கண்டெடுத்துத் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி அவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, கற்கருவிகளையும், அப்பகுதியையும் நேரில் ஆய்வு செய்தார். இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது,
நுண்கற்கருவிகள், இரும்புத் தாதுக்கள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், கவண்கல், குறியீடு உள்ள பானை ஓடு, சுடுமண் கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப்பகுதி, இரும்பாலான அம்பு முனைகள், பாண்டி ஆட்டத்துக்குப் பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஆகியவற்றை மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். இவை இடைக்கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்தவை.
இடைக்கற்காலம் கி.மு.38,000 முதல் கி.மு.7,000 வரையிலானது. இப்பகுதிகளில் கிடைக்கும் செர்ட், குவார்ட்ஸ், ஜாஸ்பர் போன்ற மிருதுவான கற்களால் செய்யப்பட்ட அளவில் சிறிய நுண்கற்கருவிகள் இக்கால மக்களால் பயன்படுத்தப்பட்டன. இவற்றை மரக்கம்புகளின் நுனியில் பொருத்தி அம்புமுனைகள், சிறுகத்திகள், சுரண்டிகளாக வேட்டையாடப் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் ஆறு, ஓடைகளின் அருகில் வாழ்ந்துள்ளனர். இவ்வூரில் ஓடை அல்லது ஆறு திசைமாறி ஓடிய தடம் உள்ளது. அர்சுனா, வைப்பாறு, கிருதுமால், குண்டாறு ஆகிய ஆற்றுப்பகுதிகளில் நுண்கற்கருவிகள் கிடைத்திருக்கின்றன.
கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கவண்கல், இரும்புப் பொருட்கள் கி.மு.4,000 முதல் கி.மு.700 வரையிலான இரும்புக்காலத்தில் பயன்பாட்டில் இருந்தவை. இரும்புத்தாதுக்கள், இரும்பு அம்புமுனைகள் கிடைத்துள்ளதால் இரும்பு உருக்கும் தொழில் இங்கு நடந்திருக்கலாம். சிவப்பு பானை ஓடுகள் வரலாற்றின் இடைக்காலத்தைச் (கி.பி.300 – கி.பி.1,300) சேர்ந்தவை. ஒரு சிவப்பு பானை ஓட்டில் அச்சு பதித்தது போன்ற பூ, பறவை குறியீடுகள் உள்ளன.
இவ்வூர் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்ததை அறிந்துகொள்ள மாணவர்கள் கண்டெடுத்த தொல்பொருட்கள் உதவியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.







முத்துக்கு முத்தாக - க.வளர்மதி

 முத்து என்பது வெறும் அணிகலன் மட்டுமல்ல. அழகு, தூய்மை இவற்றின் அடையாளம். கடல் ஆழத்தில், சிறிய சிற்பியின் உட்பகுதியில் உருவாகும் முத்து, இயற்கையின் அதிசயப் படைப்பு. முத்துச் சிப்பியில் இருந்து எடுக்கப்படும் விலை மதிப்புடைய உருண்டை வடிவ வெண்ணிற பொருள். ‘முத்தால் நத்தை பெருமைப்படும் மூடர் எத்தாலும் பெருமைப்படார்’ என்பது பழமொழி. 'முத்து' பற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர், ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்க.வளர்மதி எழுதிய கட்டுரை 17.03.2026 'தினகரன்' மதுரை பதிப்பு பழமை காப்போம் பகுதியில்....



இலக்கியங்கள், கல்வெட்டுகள் காட்டும் நெசவுத்தொழில் - க.வளர்மதி

  நெசவுத்தொழில் வெறும் வணிகமாக மட்டுமின்றி, அறமாகவும் கலைநயமிக்க வாழ்வியலாகவும், பார்க்கப்பட்டதை தமிழ் இலக்கியங்களில் காணலாம். பண்டைய தமிழகத்தில் வேளாண்மைக்கு அடுத்ததாக மிகச் சிறந்த தொழிலாக திகழ்ந்ததும் நெசவுத்தொழிலே. சங்க இலக்கியங்கள் முதல் பிற்கால பாண்டியர், சோழர் காலத்துக் கல்வெட்டுகள் வரை தமிழர்களின் நெசவுத்தொழில் நுட்பங்கள் குறித்த விரிவான செய்திகள் காணப்படுகின்றன. இதுபற்றி ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் திருமதி க.வளர்மதி எழுதிய 'அறுவை வணிகம்' பற்றிய கட்டுரை 17.02.2026 தினகரன் மதுரை பதிப்பு பழமை காப்போம் பகுதியில்...