Pages

Showing posts with label இராமநாதபுர மாவட்டம். Show all posts
Showing posts with label இராமநாதபுர மாவட்டம். Show all posts

Sunday, 12 April 2026

பாண்டியர், சோழர் வரலாறு பேசும் இராதானூர் கல்வெட்டுகள்

 இராமநாதபுர மாவட்டம், இராசசிம்மமங்கலம் வட்டத்தில், ஆனந்தூர் அருகிலுள்ளது இராதானூர்.  கல்வெட்டில் இவ்வூர் திருக்கானப்பேர்க்கூற்றத்து பாளூர் அல்லது பெரும்பாளூரான இராசராசநல்லூர் எனப்படுகிறது. தொடக்கத்தில், பாளூர் என அழைக்கப்பட்ட இவ்வூர், பின்னர் முதலாம் இராஜராஜசோழன் பெயரால்  இராசராசநல்லூர் என நல்லூராக உருவாக்கப்பட்டுள்ளது. இராதானூரின் கிழக்கிலும், மேற்கிலும் இரு சிவன் கோயில்கள் உள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள திருவிருந்தீஸ்வரர் கோயிலில் ஐந்து கல்வெட்டுகளும், மேற்கு நோக்கி அமைந்துள்ள தில்லைவனேஸ்வரர் கோயிலில் நான்கு கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றை 1926இல் இந்தியத் தொல்லியல் துறையினர் படி எடுத்து ஆவணப்படுத்தியுள்ளனர். இராதானூர் சோழர் கால சிவன் கோயில்கள் பற்றிய கட்டுரை தினகரன் மதுரை பதிப்பு 03.03.2026 பழமை காப்போம் பகுதியில்....