திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின்
சார்பில் “இராமநாதபுரம் மாவட்டத்தின் தொன்மைச் சிறப்புகள்” என்ற தலைப்பில் மாணவர் கருத்தரங்கம் 09/12/2014 அன்று நடைபெற்றது. பதினோராம் வகுப்பு மாணவி
நந்தினி தேவி வரவேற்றுப் பேசினார்.
தலைமையுரை தலைமையாசிரியர் |
தலைமை ஆசிரியர் திருமதி. பிரேமா கருத்தரங்கத்துக்குத் தலைமை தாங்கி, நமது
மாவட்டத்தில் அழகன்குளம் தேரிருவேலி ஆகிய இடங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே படித்த சான்றோர்கள் வாழ்ந்து வந்ததை எடுத்துக் கூறினார்.
கடந்த ஆண்டுகளின் மன்றச் செயல்பாடுகளைப் பற்றி மன்றப் பொறுப்பாசிரியர்
இராஜகுரு கூறினார்.
2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான வரலாறு கொண்ட நமது மாவட்டத்தின்
மரபு சார்ந்த இடங்களை மாணவர்கள் அடையாளம்
கண்டு அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றி முதுகலை ஆசிரியர் சண்முகநாதன்,
பட்டதாரி ஆசிரியர்கள் இராமு, வரலட்சுமி மற்றும் இடைநிலை ஆசிரியர் ஜீவா ஆகியோர் விளக்கினர்.
மாணவ மாணவியரில், ஒன்பதாம் வகுப்பு மாணவன் முத்துக்குமார் “பாரம்பரிய பெருமை
கொண்ட திருப்புல்லாணி” என்ற தலைப்பிலும்,
பதினோராம் வகுப்பு மாணவன் இரகுவரன் “புராண பெருமை பேசும் தேவிபட்டினம்” என்ற
தலைப்பிலும், எட்டாம் வகுப்பு மாணவன் கெயின் “இராமநாதபுரம் இராமலிங்க விலாசம்” என்ற தலைப்பிலும்,
ஒன்பதாம் வகுப்பு மாணவி ரிஸ்மியா “நூறாண்டு கண்ட பாம்பன் பாலம்” என்ற தலைப்பிலும்,
எட்டாம் வகுப்பு மாணவி அருணா “தொல்லியல் நோக்கில் தொண்டி” என்ற தலைப்பிலும்,
ஒன்பதாம் வகுப்பு மாணவி சினேகா “அழகன்குளம் அகழாய்வு” என்ற தலைப்பிலும்,
ஏழாம் வகுப்பு மாணவி அபர்ணா “தேரிருவேலியின் தொன்மைச் சிறப்பு” என்ற
தலைப்பிலும் பேசினார்கள்.
முதுகலை ஆசிரியர் சண்முக திரிபுரசுந்தரி நன்றி கூறினார்.
கருத்தரங்கத்தில்
பங்கு பெற்ற மாணவ மாணவியர்க்கு ஆசிரியர்கள் பரிசுகளை வழங்கினார்கள்.
கருத்தரங்கத்தில் பார்வையாளர்களாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹரிஹரன், அழகேஸ்வரன், ரமேஷ்கண்ணன், முரளிதரன்,
தாஜ்குமார் ஆகிய மாணவர்களுடன் ஓவிய ஆசிரியர் அன்பழகன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment