Pages

Saturday, 11 July 2020

கல்வெட்டுகள் பற்றிய சில சுவையான தகவல்கள் - வே.இராஜகுரு

பழங்காலத்தில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அதனால், அவற்றை கல்லிலும், செம்பிலும் எழுதி வைத்தார்கள்.

கல்வெட்டுச் செய்திகள் முதலில் ஓலையில் எழுதப்பட்டன. பின்னர் அவை கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன. முதலில் கல்லின் மீது எழுத வேண்டிய செய்தியை ஓவியம் போல் வரைவார்கள். பின்பு அதன்மீது கூர்மையான உளி போன்ற கருவியால் வெட்டுவார்கள். வெட்டிய எழுத்துகள் கல்லில் சிறிது பள்ளமாகத் தோன்றும். கல்லில் வெட்டப்பட்டிருப்பதால் அவை கல்வெட்டுகள் எனப்படும். கல்லைக் குறிக்கச் சிலை என்ற ஒரு சொல்லும் உண்டு. அறிவிக்கும் செய்தி அல்லது உத்தரவு சாசனம் எனப்படும். அதனால் கல்வெட்டைச் சிலாசாசனம் எனவும் கூறுவர்.

பழங்காலக் கல்வெட்டுகள் மலைக் குகைகளிலும், நடுகற்களிலும், தொல்லியல் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளிலும் கிடைக்கின்றன. முத்திரைகளிலும், மோதிரங்களிலும், பழமையான காசுகளிலும் கல்வெட்டுகளை ஒத்த எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.

இந்தக் கல்வெட்டுகள் உரைநடை வடிவிலும், பாடல் வடிவிலும் எழுதப் பெற்றிருக்கும். சில இடங்களில் உரைநடை - பாடல் இரண்டு வடிவங்களிலும் எழுதப் பெற்றிருக்கும். பாடல் கல்வெட்டுகள் கூட யாப்பு இலக்கண முறையில் பாடல் வடிவில் இல்லாமல், உரைநடை போல் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும்.

இன்றைய தமிழ் எழுத்துகள் படிப்படியாகக் காலம் தோறும் வளர்ந்து வந்பழங்காலத்தில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அதனால், அவற்றை கல்லிலும், செம்பிலும் எழுதி வைத்தார்கள்.

கல்வெட்டுச் செய்திகள் முதலில் ஓலையில் எழுதப்பட்டன. பின்னர் அவை கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன. முதலில் கல்லின் மீது எழுத வேண்டிய செய்தியை ஓவியம் போல் வரைவார்கள். பின்பு அதன்மீது கூர்மையான உளி போன்ற கருவியால் வெட்டுவார்கள். வெட்டிய எழுத்துகள் கல்லில் சிறிது பள்ளமாகத் தோன்றும். கல்லில் வெட்டப்பட்டிருப்பதால் அவை கல்வெட்டுகள் எனப்படும். கல்லைக் குறிக்கச் சிலை என்ற ஒரு சொல்லும் உண்டு. அறிவிக்கும் செய்தி அல்லது உத்தரவு சாசனம் எனப்படும். அதனால் கல்வெட்டைச் சிலாசாசனம் எனவும் கூறுவர்.

பழங்காலக் கல்வெட்டுகள் மலைக் குகைகளிலும், நடுகற்களிலும், தொல்லியல் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளிலும் கிடைக்கின்றன. முத்திரைகளிலும், மோதிரங்களிலும், பழமையான காசுகளிலும் கல்வெட்டுகளை ஒத்த எழுத்துப் பொறிப்புகள் உள்ளன.

இந்தக் கல்வெட்டுகள் உரைநடை வடிவிலும், பாடல் வடிவிலும் எழுதப் பெற்றிருக்கும். சில இடங்களில் உரைநடை - பாடல் இரண்டு வடிவங்களிலும் எழுதப் பெற்றிருக்கும். பாடல் கல்வெட்டுகள் கூட யாப்பு இலக்கண முறையில் பாடல் வடிவில் இல்லாமல், உரைநடை போல் தொடர்ந்து எழுதப்பட்டிருக்கும்.

இன்றைய தமிழ் எழுத்துகள் படிப்படியாகக் காலம் தோறும் வளர்ந்து வந்தன. மெய்யெழுத்துகள் புள்ளிபெறும் என்பது இலக்கண விதி; ஆனால் பெரும்பாலும் கல்வெட்டெழுத்துகள் புள்ளி வைத்து எழுதப்படுவதில்லை. உச்சரிப்பில் குறில், நெடில் வேறுபாடு உண்டு என்றாலும், கல்வெட்டுகளில் அவை ஒரே மாதிரியாகத்தான் எழுதப்பட்டிருக்கும். சில பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் புள்ளிகளும் உள்ளன.

வடமொழியை எழுத கிரந்தம் என்ற எழுத்துவகை உருவாக்கப்பட்டது. இன்றும் தமிழுடன் கலந்து எழுதப்பெறும் ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ ஆகியவை கிரந்த வரிவடிவங்களே.

எழுத்து முறைசொல்லுக்குச் சொல் இடைவெளி விடுவதோ, நிறுத்தக்குறிகள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, கால்புள்ளி இடும் பழக்கமோ இல்லை. மிக அரிதாகச் சில கல்வெட்டுகள் மெய்ப்புள்ளி பெற்று எழுதப்பட்டிருக்கின்றன. ரகரத்திற்கு இடப்படும் கீழ்க்கோடும் இருக்காது. கரடு என்பது காடு என்றே எழுதப்பட்டிருக்கும். பொருளுக்கு ஏற்ப அதனைக் காடு என்றும், கரடு என்றும் படிக்க வேண்டும். வரிவடிவமும் காலம் தோறும் வேறுபடும்.

தன. மெய்யெழுத்துகள் புள்ளிபெறும் என்பது இலக்கண விதி; ஆனால் பெரும்பாலும் கல்வெட்டெழுத்துகள் புள்ளி வைத்து எழுதப்படுவதில்லை. உச்சரிப்பில் குறில், நெடில் வேறுபாடு உண்டு என்றாலும், கல்வெட்டுகளில் அவை ஒரே மாதிரியாகத்தான் எழுதப்பட்டிருக்கும். சில பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் புள்ளிகளும் உள்ளன.

வடமொழியை எழுத கிரந்தம் என்ற எழுத்துவகை உருவாக்கப்பட்டது. இன்றும் தமிழுடன் கலந்து எழுதப்பெறும் ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ ஆகியவை கிரந்த வரிவடிவங்களே.

எழுத்து முறைசொல்லுக்குச் சொல் இடைவெளி விடுவதோ, நிறுத்தக்குறிகள் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, கால்புள்ளி இடும் பழக்கமோ இல்லை. மிக அரிதாகச் சில கல்வெட்டுகள் மெய்ப்புள்ளி பெற்று எழுதப்பட்டிருக்கின்றன. ரகரத்திற்கு இடப்படும் கீழ்க்கோடும் இருக்காது. கரடு என்பது காடு என்றே எழுதப்பட்டிருக்கும். பொருளுக்கு ஏற்ப அதனைக் காடு என்றும், கரடு என்றும் படிக்க வேண்டும். வரிவடிவமும் காலம் தோறும் வேறுபடும்.


ஒரே மாதிரியான காளி சிற்பங்கள்

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரில் உள்ள காளி சிற்பமும், இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் பிழைபொறுத்தம்மன் காளி சிற்பமும் ஒரே அமைப்பில் உள்ளன.

காவும், காப்புக்காடுகளும் – வே.இராஜகுரு

 

இரிங்கோல் காவு கோவில் 

மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை ஏரி, குளம், கண்மாய், ஏந்தல் என பலவற்றை வெட்டி அதில் தேக்கி வைத்தனர் நம் முன்னோர்கள். மாதம் மும்மாரி மழை பொழிய ஊர் தோறும் கோவில்களையும், அவற்றைச் சுற்றி காடுகளையும், உருவாக்கி வைத்தனர். இதனால் அவர்களால் முப்போகம் விவசாயம் செய்ய முடிந்தது. கோவில்களும், வழிபாடுகளும், காடுகளும், நீர்ப்பாசனமும் இயற்கை சார்ந்ததாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருந்தன.

மருத்துவக் குணமுள்ள பல மூலிகைத் தாவரங்களைப் பெருக்கவும், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும் தமிழர்கள் பழங்காலக் கோவில்களைச் சுற்றி காடுகளை உருவாக்கினர். இத்தகைய காடுகள் காப்புக்காடுகள் எனப்படுகின்றன. 

 


அடர்ந்த காட்டுப்பகுதியில் மரங்களின் கீழ் உருவாக்கப்பட்ட தமிழர்களின் ஆதி ஆலயங்கள், பின்  மண்தளிகளாகவும், செங்கல் தளிகளாகவும், குடைவரை கோவில்களாகவும், கற்றளிகளாகவும் காலத்துக்கு ஏற்ப உருமாற்றம் பெற்றன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில் காடுகள் அவ்வூர்களின் இயற்கையைப் பாதுகாக்கும் சூழியல் மண்டலங்களாகவே உருவாக்கப்பட்டன. இக்காடுகள் பருவமழையை வரவழைத்தல், மருத்துவ மூலிகைகள் தருதல், பறவைகள், விலங்குகளின் வாழ்விடம் என பலவித பயன்பாடுகளை நமக்கு வழங்குகின்றன. இக்கோவில் காடுகளில் உள்ள மரங்களை மக்கள் புனிதமாகக் கருதுவதால், அவற்றை கோவில் பணிகளுக்காக கூட வெட்டுவதில்லை. பல இடங்களில் இதை ஊர்க் கட்டுப்பாடாகவே பின்பற்றுகிறார்கள். கோவிலில் பொங்கல் வைக்க, தானாக உடைந்து விழும் குச்சிகளையே பயன்படுத்துகின்றனர். இவை இயற்கையைப் பாதுகாக்க நம் முன்னோர்கள் உருவாக்கிய வழிமுறைகள் ஆகும்.

ஐயனார், காளி ஆகிய தெய்வங்களுக்குரிய கோவில்கள், மரங்கள் சூழ்ந்த காப்புக் காடுகள் கொண்டதாகவே இன்றும் இருக்கின்றன. மேலும் பெரிய கோவில்களில் நந்தவனம் என்ற பெயரிலும் மரங்கள் நிறைந்த காடுகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பெருங்கோவில்களில் தலவிருட்சமாக மரங்கள் வளர்க்கும் வழக்கமும் வந்திருக்கிறது.

கேரளாவில் பல சாஸ்தா மற்றும் காளி கோவில்கள் காப்புக் காடுகளால் உருவாகியுள்ளன. இத்தகைய கோவில்கள் காவு எனப்படுகின்றன. கா, காவு என்ற சொல்லுக்கு சோலை என்பது பொருள். காவுக்கோவில் அமைந்த பகுதிகளில் உருவான ஊர்களும் கோவில் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இப்போதும் அங்கு பழமை மாறாமல் இக்காடுகளும், அவற்றின் மூலிகைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல கிராமக்கோவில்கள், முக்கியமாக ஐயனார், காளி கோவில்கள், உகாய், ஆதண்டை, ஆத்தி, தாழை, நாட்டுவீழி, சங்கஞ்செடி உள்ளிட்ட பல மூலிகைத் தாவரங்கள் சூழ்ந்து காணப்படுகின்றன. சில ஐயனார் கோவில்களில் உள்ள மூலிகைகள் மருந்தாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பார்த்திபனூர் அருகில் கீழ்ப்பெருங்கரை ஐயனார் கோவில், நரிப்பையூர் செவக்காட்டு ஐயனார் கோவில், போகலூர் முல்லைக்கோட்டை முனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் 20க்கும் மேற்பட்ட மிஸ்வாக் எனப்படும் உகாய் மரங்கள் கோவிலைச் சுற்றி காவல் நிற்கின்றன. இலங்கை கதிர்காமம் முருகன் கோவில் அருகிலுள்ள யாளக்காட்டில் ஆயிரக்கணக்கான உகாய் மரங்கள் உள்ளதாக இலங்கை வரலாற்று ஆய்வாளர் திருச்செல்வம் என்னிடம் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என அழைக்கப்பட்டாலும் பல அரியவகை மரங்கள் இங்கு செழித்து வளர்ந்து வருவதை இன்றும் பல கிராமக் கோவில்களில் காணமுடிகிறது. இத்தகைய காப்புக்காடுகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு புதிய மரங்கள் வளர்த்து பாதுகாக்கப்படவேண்டும். 

ஆதன், நாதன் ஆனது எப்படி? - ஆ.மணிகண்டன் & வே.இராஜகுரு

மதுரைக்கு மேற்கில் செக்காணூரணி அருகில் கிண்ணிமங்கலத்தில் உள்ளது ஏகநாதன் குருகுலம். இங்கு குருகுல முறையிலான சித்தர்கள் 67 தலைமுறைகளாக மக்களுக்கு கல்வி, கலை, மருத்துவம், வானவியல், ரசவாதம், போர்ப்பயிற்சி, ராஜதந்திரங்கள், ராஜயோகம் என 16 விதமான கலைகளைக் போதித்து வருகிறார்கள். இது இரண்டாயிரம் ஆண்டுகளாக இயங்கிவரும்  குருகுலமாகும்.  பரம்பரை பரம்பரையாக 66 சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். இப்போது 67 ஆவது சித்தராக இருப்பவர் அருளானந்த சுவாமிகள் ஆவார். 

சமீபத்தில் இக்குருகுலத்தில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழி கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழே சதுரமாகவும், மேலே எட்டுப்பட்டை வடிவிலும் உள்ள ஒரு கந்துவின் கீழ்ப்பகுதியில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் ஏகன் ஆதன் கோட்டம் என எழுதப்பட்டுள்ளது. ஏகன் ஆதன் என்பவரின் கோட்டம் என இதை பொருள் கொள்ளலாம். இதில் கூறப்பட்டுள்ள ஏகன் ஆதன் என்பவர் இக்குருகுலத்தின் முதல் சித்தராகக் கருதப்படுகிறார்.

கோட்டம் என்ற சொல்லுக்கு கோவில் என்பது பொருள். புறநானூறு 299 ஆம் பாடலில் முருகன் கோட்டம் குறிப்பிடப்படுகிறது. தமிழர்களின் இறை வழிபாட்டில் கந்து வழிபாடு மிகப் பழமையானது. கல் தூண் என்ற சொல்லே கந்து எனச் சுருங்கியுள்ளது. பழமையான கந்து வழிபாடு பின்னர் லிங்க வழிபாடாக மாறியுள்ளதற்கு இக்கல்வெட்டும் கந்துவும் சான்றாக உள்ளன.

கீழடி, கொடுமணல், அரிக்கமேடு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகளில் ஆதன் என்ற சொல் பயின்று வருகிறது. இதன் மூலம் குழுவின் தலைவர், மன்னன் இவர்களோடு கலைகளை கற்றுக்கொடுத்த சித்தரும், ஆதன் என அழைக்கப்பட்டிருப்பது உறுதியாகிறது.

மேலும் இக்கல்வெட்டில் சொல்லப்பட்ட ஏகன் ஆதன் கோட்டம் என்பது பின்னாளில் ஏகநாதன் பள்ளிப்படை என்றும் தொடர்ச்சியாக ஏகநாதர் திருக்கோவில் என்றும் மாறியிருக்கிறது. தமிழ் இலக்கண புணர்ச்சி விதியின்படி ஏகன் ஆதன் என்பது ஏகனாதன் என்றாகி பின்னாளில் ஏகநாதன் என்றானது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இதே அடிப்படையில் தமிழகத்தில் அமைந்திருக்கும் பிற கோவில் இறைவனின் பெயர்களை ஒப்புமை செய்யும்போது அதில் பழங்கால தமிழ்ச் சொற்களோடு ஆதன் என்ற சொல் இணைந்து (னாதன்) நாதன் என்ற சொல்லாக திரிபடைந்திருப்பதை அறியலாம்.

சொக்கன் ஆதன் என்ற மதுரையை ஆண்ட மன்னனின் பெயர்தான் சொக்கநாதன் என ஆகியிருக்கிறது. இதேபோல் நாகன் ஆதன் என்ற பெயர் நாகநாதன் என்றும், கயிலாயன் ஆதன் கயிலாயநாதன் என்றும், ராமன் ஆதன் ராமநாதன் என்றும் இந்த கல்வெட்டை அடிப்படையாகக்கொண்டு கோயில்களின் நாதன் என்ற சொல்லாடல் ஆதன் என்ற சொல்லிலிருந்து பிறந்தது என நிறுவலாம்.

தமிழ் சொற்கள் எவ்வாறு பிற மொழிகளில் உள்வாங்கிக் கொள்ளப்பட்டன என்பதற்கான சான்றாக இக்கல்வெட்டு அமைந்திருப்பது தமிழ்மொழி வரலாற்றில் மிக முக்கிய மைல் கல் ஆகும்.

ஆதன் என்று பெயரிடும் வழக்கம் சேரர்களிடையேயும், பாண்டியர்களிடையேயும் இருந்துள்ளது. உதாரணமாக சேரல் ஆதன் சேரலாதன் என்றும், வாழி ஆதன் வாழியாதன் என்றும், ஆதன் உங்கன் ஆதனுங்கன் என்றும் வழங்கி வந்துள்ளதை சான்றாகக் கொள்ளலாம்.

இப்படியாக இந்திய மொழியியல் வரலாற்றில் இக்கல்வெட்டு குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பிடிப்பதோடு மனித வர்க்கவியல் ஆய்விலும் ஒரு சிறந்த பண்பாட்டு தொடர்ச்சி கொண்ட குருகுல நிறுவனத்தின் சித்தர் வழி கல்வி கற்கும் முறைக்கும் புதிய சான்றுகளை தரும் என்பதில் ஐயமில்லை. குருகுலக்கல்வி முறை தமிழ்நாட்டில் மிகப் பழங்காலம் முதல் இயங்கி வந்திருப்பதையும்,  குருகுலக் கல்வி அளித்த சித்தர்கள் தெய்வமாக வணங்கப்பட்டு வந்துள்ளதையும் இதன்மூலம் அறியமுடிகிறது.

படங்கள் உதவி: ஆனந்தன் சன்னாசி

(கட்டுரை ஆசிரியர்கள்: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் முனைவர் பட்ட ஆய்வாளர் ஆ.மணிகண்டன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் முனைவர் பட்ட ஆய்வாளர் வே.இராஜகுரு)


அல்தரை – வே.இராஜகுரு

மலைநாடு துரியோதனன் கோவில் அல்தரை

அல்தரா என்பதற்கு தமிழில் அல்தரை - தரை இல்லை உயரமானது என்பது பொருள். இது கேரளாவில் உள்ள மலைப்பகுதி கோவில்களில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. இது லிங்கத்தின் ஆவுடையார் போன்ற தோற்றத்தில் உள்ளது.

பாண்டிய நாட்டு ஆவுடை சதுர வடிவிலும், சோழ நாட்டு ஆவுடை வட்ட வடிவிலும், சாளுக்கிய நாட்டு ஆவுடை நீள்வட்ட வடிவிலும் இருக்கும். சதுர வடிவ   ஆவுடையின், நடுவில் கந்து இணைந்த வடிவமாக பாண்டிய நாட்டுக் கோவில்களில் உள்ள லிங்கங்கள் காணப்படுகின்றன.

அல்தரா  என்ற சொல்லே althara - altar என ஆங்கிலத்தில் வழக்கில் உள்ளது. கிறிஸ்தவ, யூத மத வழிபாட்டு இடங்களில் உள்ள இது போன்ற இடமும் altar - பலிபீடம் எனப்படுகிறது. கேரளாவில் அல்தரை எனப்படும் இடங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகம் காணப்படுகிறது. இங்கு துரியோதனன், சகுனி உள்ளிட்டோருக்கும் இது போன்ற அமைப்பில் கோயில்கள் உள்ளன. இவை தற்போதும் மக்கள் வழிபாட்டில் உள்ளன. இது போன்று உலகம் முழுவதும் தோன்றி வளர்ந்த அனைத்து மதங்களிலும் தமிழர்களின் அடையாளங்கள் உள்ளன.



உலகின் மிகப் பழமையான கோவில் - கோபெக்லி தேபே (Göbekli Tepe) - வே.இராஜகுரு

  
 

கோபெக்லி தேபே (Göbekli Tepe) - துருக்கி நாட்டின், தென்கிழக்கு அனதோலியா பிரதேசத்தில், சன்லூர்பா நகரத்திற்கு அருகில் உள்ள உலகின் மிகப் பழமையான கோவில். இது 15மீ உயரம், 300மீ சுற்றளவு கொண்ட தொல்லியல் மேடு. கடல் மட்டத்திலிருந்து 760மீ உயரத்தில் உள்ளது. கி.மு.10000 முதல் கி.மு.8000 வரையிலான காலத்தைச் சேர்ந்தது. 12 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இதை 2008-இல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. இதை Potbelly Hill என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். தொப்பை என்ற தமிழ்ச் சொல்லை தேபே என சொல்கிறார்களோ எனத் தோன்றுகிறது.

 

    இங்கு 20 அடி உயரமுள்ள T வடிவிலான கல்தூண்கள் 200க்கும் மேல் உள்ளன. இவை வட்டவடிவில் அமைக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 20 வட்டங்கள் இங்கு உள்ளன. கற்தூண்களில் காளை, நரி, கொக்கு, காட்டுப்பன்றி போன்றவற்றின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு குலக்குறிக் கம்பமும் உள்ளது. மட்பாண்டங்கள், எழுத்து, சக்கரம் மற்றும் கருவிகள் இல்லாத காலத்தில் பல டன் எடையுள்ள கற்கள் மூலம் இந்த கோவில் எவ்வாறு கட்டப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை குமரிக்கண்ட அழிவுடன் தொடர்புடைய நினைவுச் சின்னமாக இருக்கலாம். 



வெளிநாட்டு வணிகத் தொடர்புக்கு ஆதாரமான அழகன்குளம் காசுகள் - வே.இராஜகுரு

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வுகள் மூலம் இவ்வூர், 2400 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பல்வேறு நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த துறைமுகமாகவும், வணிக மையமாகவும் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அழகன்குளத்தில் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட காசுகள் மூலம் இவ்வூரின் வெளிநாட்டு வணிகத் தொடர்பு சமீபகாலம் வரை இருந்துள்ளதை நிரூபிக்கிறது.

அழகன்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வக்கீல் அசோகனின் முன்னோர்கள் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகம் செய்தவர்கள். அவர் பூர்வீகவீட்டின் பழமையான பெட்டிகளை சுத்தம் செய்தபோது அதில் ஒரு பெட்டியில் பழைய நாணயங்கள் இருந்துள்ளன. இதில் இராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்த ஈழக்காசு, இந்திய, இலங்கை, இங்கிலாந்து நாட்டு வெள்ளி, செப்புக்காசுகள், திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட பணம் எனும் வெள்ளிக் காசு ஆகியவை இதில் முக்கியமானவை.

ஈழக்காசு

               ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு இக்காசுகள் பற்றிக் கூறியதாவது, இங்கு கிடைத்த ஈழக்காசு முதலாம் ராஜராஜசோழன் இலங்கையை வென்ற பிறகு வெளியிட்ட காசு ஆகும். இக்காசு தேய்ந்த நிலையில் உள்ளது. ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன. 
திருவிதாங்கூர் பணம்           
            திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட பணம் எனும் வெள்ளிக்காசின் ஒருபுறம் சங்கும், மறுபுறம் பணம் ஒன் என மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது. இதில் 1096 எனும் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இது கொல்லம் ஆண்டு எனப்படும் மலையாள ஆண்டு ஆகும். இதனுடன் 825 ஐ கூட்டி தற்போதைய ஆண்டு கணக்கிடப்படுகிறது. இக்காசு மூலம்திருநாள் ராமவர்மா என்ற திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் 1921-இல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அம்மன்னரைக் குறிக்க ஆர்.வி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. 
இலங்கை சதம்
               இலங்கை சதம் காசுகளில் தமிழ், சிங்களத்தில் சதம் என எழுதப்பட்டுள்ளது. இவை 1929 முதல் 1944 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட செப்புக்காசுகள். இதில் இலங்கையில் அதிகம் காணப்படும் தாளிப்பனை எனும் மரத்தின் படம் உள்ளது. தற்போதும் இலங்கையின் பணத்தாள்களில் தாளிப்பனையின் படம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. 
               மேலும் விக்டோரியா மகாராணி, ஐந்தாம், ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோர் காலத்தைச் சேர்ந்த வெள்ளி நாணயங்கள், ஏழாம் எட்வர்டு மன்னர் 1909இல் வெளியிட்ட கிரேட் பிரிட்டனில் புழக்கத்தில் இருந்த பென்னி நாணயம் ஆகியவையும் இதில் உள்ளன. 
               பல நூற்றாண்டுகளாக அழகன்குளத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை, இங்கிலாந்து, திருவிதாங்கூர் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்துள்ளனர் என்பதை இக்காசுகள் மூலம் அறிய முடிகிறது. இதேபோல் இம்மாவட்டத்தைச் சேர்ந்த பலர் ஆங்கிலேயர் காலத்தில் இலங்கையில் குடியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

நாளிதழ் செய்திகள்






தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர், மாணவிக்கு இராமநாதபுரம் எஸ்.பி பாராட்டு

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவி ஹரிதா ஜீவா கல்வெட்டுகள் பற்றிய சில சுவையான தகவல்கள் என்ற தலைப்பில் பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பேசியதன் காணொளியை இராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் டிவிட்டரில் பார்த்திருக்கிறார்.


அவர் பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு, பள்ளி மாணவ மாணவியருக்கு தொல்லியல், கல்வெட்டுகள், கோவில் கட்டடக்கலை பற்றி பயிற்சி அளித்து அவர்களை தொல்லியல் ஆர்வலர்களாக உருவாக்கி வருவதை அறிந்து அவரையும் மாணவி ஹரிதா ஜீவாவையும் நேரில் சந்தித்து பாராட்ட விரும்பினார்.

இதன் பேரில் ஆசிரியர் வே.இராஜகுரு மற்றும் மாணவி ஹரிதா ஜீவா ஆகியோர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை நேரில் சந்தித்தனர். மாணவியை கல்வெட்டுகள் பற்றிப் பேசச் சொல்லி முழுவதுமாகக் கேட்டறிந்தார். இதில் ஆர்வம் வந்ததன் காரணம், எதிர்காலத்தில் என்ன படிக்க விரும்புகிறார் என்பதையும், பெற்றோர் தொழில் பற்றியும் கேட்டறிந்தார். அரசுப்பள்ளியில் பயிலும் மாணவியை பாராட்டி ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து இதுபோன்று ஆர்வமுடன் செயல்படக் கேட்டுக்கொண்டார்.

வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல தொல்லியல் தடயங்களைக் கண்டறிந்தது பற்றியும், பள்ளி மாணவர்களின் கட்டுரைகளைத் தொகுத்து தேடித்திரிவோம் வா என்ற  நூல் வெளியிட்டதைப் பற்றியும், மரபு நடை நிகழ்வுகள் மூலம் பொதுமக்களுக்கு வரலாற்றுச் சின்னங்களின் சிறப்புகளை நேரில் காணச் செய்து வருவதைப்  பற்றியும் ராஜகுரு காவல் கண்காணிப்பாளரிடம்  விவரித்தார். இதனால் மனம் நெகிழ்ந்த காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆசிரியர் இராஜகுருவுக்கும் மாணவி ஹரிதா ஜீவாவுக்கும் பரிசு வழங்கிப் பாராட்டினார். மாவட்டத்தில் உள்ள பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க உரிய உதவிகள் செய்வதாகத் தெரிவித்தார்.


மாணவி ஹரிதா ஜீவாவிடம் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வருண்குமார் அவர்கள் உரையாடும் காணொளி


நாளிதழ் செய்திகள்





சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு இணையவழியில் கோயில் கட்டடக்கலை பயிற்சி

அருங்காட்சியகத்தின் முக்கியத்துவத்தினை விளக்கும் விதமாக, ஆண்டு தோறும் மே 18 சர்வதேச அருங்காட்சியக தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை 1977 முதல் சர்வதேச அருங்காட்சியக சங்கம் (International Council of Museum) நடத்துகிறது. “சமத்துவத்திற்கான அருங்காட்சியகங்கள் - அதன் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம்” என்பது 2020ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

கொரொனா ஊரடங்கு காரணமாக, சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு இந்தாண்டு கோவில் கட்டடக்கலை – ஓர் அறிமுகம் என்ற பயிற்சிமுகாம் இணையவழியில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி இராமநாதபுரம் அரசு அருங்காட்சியகமும், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும்  இணைந்து  வாட்ஸ்அப் செயலி மூலம் 08.05.2020 முதல் 18.05.2020 வரை 11 நாட்கள் இப்பயிற்சியை நடத்தின. பயிற்சியை இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு நடத்தினார்.

கோயில்களின் தோற்றம், அதன் அமைப்பு, விமானம், கோபுரம் இவற்றின் உறுப்புகள் அவற்றின் வகைகளை பாண்டிய நாடு, சோழநாட்டுக் கோயில்களின் 300க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் விளக்கிக் கூறினார். கோயில் படங்களில் அதன் உறுப்புகளின் பாகங்கள் குறித்து விளக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் அவர்கள் கற்றுக்கொண்டவற்றிலிருந்து வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது. கோயிலின் பாகங்களை வரைந்து அவற்றின் பெயர்களைக் குறித்தல், கோயில் அமைப்பை விளக்கி கட்டுரை எழுதுதல் ஆகிய செயல்பாடுகளில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று பயின்றுள்ளனர்.

இப்பயிற்சியில் திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மகளிர் கல்லூரி மாணவி, பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற கப்பற்படை அதிகாரி, தொல்லியல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.  இராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் வி.சிவகுமார், இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்  என்றும், அடுத்த கட்டமாக தமிழ் பிராமி கல்வெட்டுகள் படிக்கும் பயிற்சியும் இணைய வழியில் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

நாளிதழ் செய்திகள்