கல்வி
இணைச் செயல்பாடுகள் மூலம் மாணவர்களிடம் பல்வேறு
சமூகப் பண்புகளை வளர்க்க பள்ளிகளில் பலவித மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
மதிப்பெண்கள் மட்டுமே மாணவர்களின் சாதனையாக பேசப்பட்டுவரும் இக்காலகட்டத்தில், இத்தகைய மன்றங்களில்
மாணவர்களை ஈடுபடுத்துவது சற்று கடினமான
காரியமாக உள்ளது.
இராமநாதபுரம்
மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு
வரும் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவ மாணவியர்களுக்கு, கல்வெட்டுகளை படித்தல்,
படிஎடுத்தல், சிற்பங்களின் காலத்தை கணித்தல், கிராமக் கோயில்களின் வரலாற்றை ஆவணப்படுத்துதல்,
நமது மரபுச் சின்னங்கள், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், பாரம்பரியத் தாவரங்களை
அடையாளம் கண்டு பாதுகாத்தல் போன்ற தலைப்புகளில் தொடர்ந்து நேர்முகப் பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி
அறிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டணம்
பெண்ணையாறு தொல்லியல் சங்கத்தைச் சேர்ந்த சுகவனமுருகன் அவர்கள் தனது
சொந்த செலவில் கல்வெட்டு எழுத்துகளின் காலத்தை மாணவர்கள் கணிப்பதற்கு உரிய பயிற்சி
பெற ‘தமிழ்நாட்டு எழுத்து
வளர்ச்சி’ என்ற நூலை 20
மாணவர்களுக்கு இலவசமாக அனுப்பி வைத்திருந்தார். அந்த நூல்களை பள்ளித் தலைமையாசிரியர் பிரேமா 13.03.2017
அன்று
மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மன்றப் பொறுப்பாசிரியர்
இராஜகுரு, ஆசிரியர் ஜீவா ஆகியோர் செய்திருந்தனர்.
நாளிதழ்
செய்திகள்
No comments:
Post a Comment