திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு
மன்றத்தின் சார்பில் ‘நம்ம ஊரு வரலாறு’ என்ற தலைப்பில் மாணவர் ஆய்வரங்கம் நடைபெற்றது.
மாணவி விசாலி |
ஆய்வரங்கத்தை தொடங்கி வைத்து பள்ளித் தலைமையாசிரியர் மு.பிரேமா பேசினார். பள்ளியின் இடைநிலையாசிரியர் நவராஜ் வரவேற்றார். மாணவ மாணவியர் வரலாற்றுத்
தகவல்களை எவ்வாறு திரட்டினர் என்பதை பள்ளியின் இடைநிலையாசிரியர் மு.தமயந்தி தனது ஆய்வரங்க அறிமுக உரையில் தெரிவித்தார்.
மாணவி அன்சியா பேகம் |
இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 8 மாணவ
மாணவியர் தங்கள் ஊர்களின் வரலாற்றை வாய்மொழித் தகவல்கள், களஆய்வு, நேர்காணல், நாணயங்கள், ஊர் பெயராய்வு
ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டு மாதங்களாக ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக்
கட்டுரைகளை இந்த ஆய்வரங்கில் வாசித்தனர்.
- பொக்கனாரேந்தல் பற்றி பா.அபர்ணாவும்
- திருப்புல்லாணியின் நீர்நிலைகள்
பற்றி மு.விசாலியும்
- கோரைக்குட்டம் பற்றி அன்சியா
பேகமும்
- திருப்புல்லாணியின் சிறப்புகள்
பற்றி இராஜபாண்டியும்
- பஞ்சத்தைத் தாங்கிய
பஞ்சந்தாங்கி பற்றி மதுவாசுகியும்
- தாதனேந்தல் வரலாறும்
அக்கிராமப் பாடல்களும் பற்றி சினேகாவும்
- பள்ளபச்சேரியின்
வரலாறு பற்றி பானுமுத்துப் பிரியாவும்
- முத்துவீரப்பன் வலசையின்
சிறப்புகள் பற்றி அபிநயாவும்
தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை
வாசித்தனர்.
மாணவன் இராஜபாண்டி |
கள
ஆய்வுகள் மூலம் பொக்கனரேந்தல் என்ற ஊரில் தலை உடைந்த நிலையில் சமண தீர்த்தங்கரர்
சிலை மற்றும் மருத்துவ குணமிக்க சங்கஞ்செடி என்ற மூலிகைத் தாவரம் ஆகியவற்றை அபர்ணா
என்ற மாணவியும்,
மாணவி மதுவாசுகி |
தாதனேந்தல் என்ற ஊரில் இராஜராஜசோழன் கால
ஈழக்காசு மற்றும் உகாய் என்ற பாலைத்திணைக்குரிய மரம் ஆகியவற்றை சினேகா என்ற
மாணவியும் கண்டுபிடித்துள்ளனர்.
மாணவி சினேகா |
தங்கள் ஊரின்
வரலாறுகளை மக்களின் வரலாறாய் ஆவணப்படுத்தி புதிய
தகவல்களைத் திரட்டித் தந்த மாணவ மாணவியரை மன்றப் பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு பாராட்டிப் பேசினார். பட்டதாரி ஆசிரியர் இராமு நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாணவர்கள் பூமிகா, முகமது
இர்சாத், ரமேஷ் ஹரிகரன், புவனேஸ்வரன், ஓவிய ஆசிரியர் அன்பழகன் ஆகியோர்
செய்திருந்தனர்.
மாணவி பானுமுத்துப்பிரியா |
No comments:
Post a Comment