Pages

Friday 30 December 2011

கங்கைகொண்ட சோழபுரம்


·        தஞ்சையில் பெரிய கோயில் கட்டிய இராஜராஜசோழனின் மகனான இராஜேந்திர சோழன் கங்கை வரை படையெடுத்து வடக்கேயுள்ள அரசர்களை வென்றான். கங்கை நீரை கொணர்ந்தான். அதன்  நினைவாக புதிய நகரம் உருவாகியது. அதுதான் கங்கைகொண்ட சோழபுரம்.   

·        தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கூறுவர். 

·        தஞ்சை கோயிலுக்கு இணையாக உருவான கலைக்கோயில் இது. கருவறையில் குளுமை பரப்பும் சந்திரகாந்தக் கல் பதிக்கப்பட்டிருக்கிறது.

·        மூல லிங்கம் 16½ அடி சுற்றளவும், 13 அடி உயரமும் கொண்டது. மொத்தமாக 49½ உயரம்.

·        மூலவரின் திருப்பெயர் பெருவுடையார் எனும் பிரகதீஸ்வரர்; அம்பாளின் திருப்பெயர் பெரியநாயகி எனும் பிரகன்நாயகி.

·        ஓங்கி உயர்ந்து நிற்கும் கோயில் விமானம் கீழே சதுரமாகவும், அதற்கு மேல் எண்பட்டை வடிவிலும், உச்சியில் வட்ட வடிவிலும் அமைந்துள்ளது.

·        கோயிலின் கண்ணி மூலையில் அழகிய கணபதி கோயில் உள்ளது. இவருக்கு கணக்கு கணபதி என்று பெயர்.

·        வேறெந்த தலத்திலும் இல்லாதபடி, ஒரே கல்லில் மலர்ந்த தாமரையின் மத்தியில் நவகிரகங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன

·        அர்த்த மண்டபத்திலும், மகாமண்டபத்திலும் ஒரே கல்லால் ஆன 12அடி  துவார பாலகர்களை காணலாம்.

·        முன்னூறு வருடங்களுக்கு முன்பு ஆங்கிலயர்கள் பாலம் கட்ட முனைந்தபோது, முன் கோபுரம் நிலை குலைந்தது. அதனை மீண்டும் எப்படி கட்டினாலும் நிற்கவேயில்லை. ஒவ்வொரு வரிசையில் உள்ள கல்லும் குறிப்பிட்ட அளவில் இருந்தது. மூல கோபுரத்தில் எந்த வரிசையில் கற்கள் அமைக்கப்பட்டனவோ அதே  வரிசையில் வைத்து அடுக்க, கோபுரம் நிமிர்ந்தது.

·        கோயிலுக்கு அருகேயுள்ள தொல்பொருள் துறை அலுவலகத்தில் கோயிலைச் சார்ந்த பழமையான பொருட்களும், அகழ்வுப் பணியில் கிடைத்த உலோகப் துண்டுகளையும் காணலாம்.
Gangai Konda Cholapuram 1

Gangai Konda Cholapuram 2

Gangai Konda Cholapuram 3

Gangai Konda Cholapuram 4

No comments:

Post a Comment