Pages

Tuesday, 20 December 2011

தொன்மைப் பாதுகாப்பு மன்றம்


இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மைபாதுகாப்பு மன்றம். இந்தியாவின் பாரம்பரியச் சிறப்புகள் பற்றியும், தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்கள் பற்றியும், நமது பாரம்பரிய கலைகள் பற்றியும் UNESCO வால் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுக்கிணங்க இம்மன்றம் தொடங்கப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் திரு. ஜே.ஜோ பிரகாஷ் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி இம்மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்ற பொறுப்பாசிரியர் திரு.வே.இராஜகுரு, உதவி தலைமையாசிரியர் திரு.த.ஜூலியஸ் மற்றும்  பிற ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு இம்மன்றத்தை சிறப்பாக  நடத்தி வருகிறார்.

No comments:

Post a Comment