இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் உலக மரபு வாரவிழாவை முன்னிட்டு தொல்லியல் கண்காட்சி 21.11.2025 அன்று நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் கர்ணன் முன்னிலை வகித்தார். மன்றச் செயலாளர் வே.இராஜகுரு அனைவரையும் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) சங்கர் தொல்லியல் கண்காட்சியை தொடங்கி வைத்துப் பார்வையிட்டனர்.
கண்காட்சியில் இராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் சிறப்புகள், பழைய, புதிய, நுண்கற்காலக் கருவிகள், சங்ககால கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சீன நாட்டு போர்சலின், செலடன் ஓடுகள், சுடுமண் பொம்மைகள், குறியீடு உள்ள பானை ஓடுகள், வட்டச்சில்லுகள், இரும்புத்தாதுக்கள், இரும்புக்கழிவுகள், ஓலைச்சுவடிகள், எழுத்தாணிகள், தமிழி, தமிழ், வட்டெழுத்துக் கல்வெட்டுகளின் மைப்படிகள், நாணயங்கள், பழமையான செங்கற்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவ மாணவியர் பார்வையிட்டு அறிந்து கொண்டனர்.






No comments:
Post a Comment