இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ்
சுதா அழகன் நினைவு அரசு
மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் ‘இராமநாதபுரம் மாவட்ட பாரம்பரியத்
தாவரங்கள்’ என்ற
தலைப்பில் கருத்தரங்கமும், கண்காட்சியும் 30.06.2017 அன்று நடைபெற்றது.
கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவியர் |
நிகழ்ச்சி நிரல் |
இப்பள்ளியின் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு
மாணவிகள் 8 பேர் இம்மாவட்ட பாரம்பரிய மூலிகைத்
தாவரங்களைப் பற்றிப் பேசினர்.
கொக்கிமுள் ஆதண்டை பற்றி சா.கவிதாவும், ஆத்தி மரம் பற்றி பா.அபர்ணாவும், சங்கஞ்செடி பற்றி இரா.புவனிஷாவும், கடலாரை பற்றி மு.விசாலியும், மணிபூவந்தி பற்றி க.சுவித்தாவும், உகாய் எனும் மிஸ்வாக் பற்றி கு.சினேகாவும், நாட்டு வீழி பற்றி த.நமீதாவும், பொந்தன்புளி மரம் பற்றி மு.அபிநயாவும் பேசினர். ஒன்பதாம் வகுப்பு மாணவி மு.திவ்யா நன்றி
கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பாரம்பரியத் தாவரங்களின் இலை, கனி, தண்டு, பூ
ஆகியவற்றின் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு உரிய ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அன்பழகன், கிறிஸ்டி ஹெலன் மேரி, ஸ்டீபன் ஜெயராஜ், முகம்மது சாரா சமீமத்
அலியா மற்றும்
மாணவர்கள் பிரவின், கனிஷ்கர்,
முருகேஸ்வரன், மனோகரன்,
பாலமுருகன்,
ராம்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
நாளிதழ்
செய்திகள்
VIKATAN eMAGAZINE
தாவரங்கள்
பற்றி மாணவிகள் பேசியதன் ஒளிப்பதிவுகள்
No comments:
Post a Comment