Pages

Friday, 26 July 2013

தொன்மைப் பாதுகாப்பு மன்ற கருத்தரங்கம்


திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்ற நான்காம் ஆண்டு துவக்க விழா மாணவர் கருத்தரங்கமாக நடைபெற்றது.

மாணவன் திவாகரன் வரவேற்றுப் பேசினான். தலைமை ஆசிரியர் திருமதி. பிரேமா கருத்தரங்கத்துக்குத் தலைமை தாங்கி மன்றச் செயல்பாடுகளில் மாணவர் ஈடுபட்டு பழமையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினார். 
முதுகலை ஆசிரியர்கள் திரு.சண்முகநாதன், திரு.கருணாநிதி ஆகியோர் உலகப் பாரம்பரியம் பற்றிப் பேசினர். கடந்த ஆண்டுகளின் மன்றச் செயல்பாடுகளைப் பற்றி மன்றப் பொறுப்பாசிரியர் திரு.இராஜகுரு கூறினார்.




மாணவ மாணவியரில், திருப்புல்லாணியின் பாரம்பரியம் பற்றி திவ்யாவும், பாரம்பரிய தமிழர் விளையாட்டுகள் பற்றி பிரியதர்ஷினியும், குறிஞ்சி நில ஊர்கள் பற்றி பிரேமாவும், மருத நில ஊர்கள் பற்றி சேதுலட்சுமியும், திராவிட மொழிகள் பற்றி மரியம் மப்ராவும், தமிழர்களின் ஓவியங்கள் பற்றி உமாதேவியும் பேசினர். பிரேமா, சேதுலட்சுமி, முனீஸ்வரி ஆகியோர் ஒரு நாட்டுப்புறப்பாடல் பாடினர். முதுகலை ஆசிரியர் திருமதி. ஜான்சிராணி நன்றி கூறினார். கருத்தரங்கில் மாணவ மாணவியர்களால் சேகரிக்கப்பட்ட ஆங்கிலேயர் காலத்தில் இந்தியா, இலங்கையில் புழக்கத்தில் இருந்த நாணயங்களின் கண்காட்சியும் நடைபெற்றது. மதுரை மீனாட்சிபுரத்தில் சேகரிக்கப்பட்ட 35×18×6 செ.மீ. அளவுள்ள சங்க காலத்தைச் சேர்ந்த இரண்டாயிரம் ஆண்டு பழமையான செங்கல் மாணவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் தினேஷ், பூபாகரன், பிரவின்குமார், கார்த்திக் ராஜ் ஆகிய மாணவர்கள் உதவினர். திரு.ஷேக் அப்துல் காதர், செல்வி.நதியா, திருமதி.ஹெலன் ஜாய்ஸ் நிர்மலா, திரு.நவராஜ், திரு.ஜீவா ஆகிய ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












1 comment:

  1. தொன்மை பாதுகாப்பு மன்ற பதிவேடு இருந்தால் பகிரவும் ஐயா...

    ReplyDelete