இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், சுப்பிரமணியபுரம் என்ற ஊரில் சீவலாத்தி கண்மாய்க்குள் ஒரு பழமையான பெரிய அளவிலான சோழர்கால லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தைப் பாதுகாக்க ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் வரலாறு குறித்து இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது,
ஆறடி உயரம் உள்ள லிங்கத்தின் ஆவுடை வட்டவடிவில் இருக்கிறது. இதனால் இந்த லிங்கம் சோழர் கலைப்பாணியில் உள்ளது எனலாம். ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கச் சோழன் வரையிலான காலத்தில் பாண்டிய நாடு முழுவதும் சோழர் ஆட்சியின் கீழ் இருந்தது. அச்சமயம் திருவாடானை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் சோழநாட்டு வணிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இக்கால கட்டத்தில் இவ்வூரில் ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டிருக்கலாம். லிங்கம் பெரியதாக இருப்பதால் கோயிலும் பெரியதாக இருந்திருக்கும். இவ்வூரையும், சுற்றி உள்ள ஊர்களையும் நேரில் ஆய்வு செய்தால்தான் இதன் முழு வரலாற்றைக் கண்டறிய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.



No comments:
Post a Comment