Pages

Monday, 19 November 2018

திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதுபதி கோட்டைகள் பற்றிய புகைப்படக்கண்காட்சி


இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு  அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் சேதுபதி கோட்டைகள் என்ற தலைப்பில் புகைப்படக்கண்காட்சி  11.10.2018 அன்று நடைபெற்றது. ஒன்பதாம் வகுப்பு மாணவன் பு.தர்மபிரபு  வரவேற்றார். 

மன்றப் பொறுப்பாசிரியர் வே.இராஜகுரு கண்காட்சியை திறந்து வைத்தார்.  கண்காட்சியில் கமுதி, செங்கமடை ஆறுமுகக்கோட்டை, இராமநாதபுரம், திருமயம், திருப்புல்லாணி ஆகிய ஊர்களில் உள்ள கோட்டைகளின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கோட்டைகள் பற்றிய தகவல்களை ச.பிரியதர்ஷினி, ஜெ.சுகுணா, மு.பேச்சியம்மாள், .வினோதினி, மு.முகம்மது லபிப், கு.யோகாஸ்ரீ ஆகிய மாணவ மாணவிகள்  கூறினர்.
ஏழாம் வகுப்பு மாணவி வி.டோனிகா நன்றி கூறினார். ஆறாம் வகுப்பு மாணவி ஜீ.ஹரிதா ஜீவா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, தனலட்சுமி மாணவர்கள் மு.சுதர்ஸன், முஜிபு ரகுமான் ஆகியோர் செய்திருந்தனர்.

நாளிதழ் செய்திகள்





 

No comments:

Post a Comment