Pages

Thursday 14 May 2015

மங்கலதேவி கண்ணகி கோயில் வளாகத்தில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ராஜராஜ சோழன் காலத்து நாணயம் கண்டெடுப்பு




04 May 2015 08:57 PM IST 

மங்கலதேவி கண்ணகி கோயில் வாளாகத்தில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய ராஜராஜ சோழன் காலத்து செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நாணயம் கோயிலின் பழைமையை, உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் வேளாண் இயக்குநர் எம்.ராஜேந்திரன் திங்கட்கிழமை தெரிவித்தார்.
மங்கலதேவி கண்ணகி கோயில் தமிழக-கேரள எல்லை கூடலூர் வனச்சகரத்தில் அமைத்துள்ளது. இந்த கோயிலுக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக சித்திரை முவு நிலவு நாளில் ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ராஜேந்திரன் ஆய்வுகள் செய்தும், தேவையான ஆலோசனைகளையும் மங்கலதேவி அறக்கட்டளையினருக்கு தெரிவித்து வருகிறார். திங்கட்கிழமை கோயில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசின் வேளாண்மை துறை இயக்குநர் எம்.ராஜேந்திரன் கூறியதாவது:- கடந்தாண்டு சித்திரை முழு நிலவு நாளில், விழா முடிந்து கோயில் வளாகத்தை சுத்த செய்தபோது, கோயில் பூஜாரியின்  5 வயது மகன் கிணற்றின் அருகே பழைமையான நாணயம் கண்டெடுத்ததாக கொடுத்தான். அந்த நாணயத்தை நான் தொல்லியல் துறை நிபுணர்களான டாக்டர் வேதாச்சலம், டாக்டர் பத்மாவதி, பேராசிரியர் தெய்வநாயகத்திடம் காண்பித்து கேட்டபோது, அந்த நாணம் செப்பு நாணயம் என்றும். அந்த நாணயம் கி.பி 985 முதல் 1014 ஆம் ஆண்டுவரை முதலாம் ராஜராஜ சோழன் காலத்து நாணயம் என்று தெரியவந்தது.
மேலும், கண்ணகி கோயில் வளாகத்தில் உள்ள கல்வெட்டு 1,800 ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவன் கட்டிய மங்கலதேவி கண்ணகி கோயிலை  கி.பி.1006 ஆம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழன் புதுப்பித்ததாக உள்ளது. இந்நிலையில், இந்த நாணயத்தில் ஒரு பக்கம் ஒருவர் உட்கார்ந்து இருப்பது போலும், மற்றொரு பக்கத்தில் அமர்ந்து இருப்பது போலவும், குத்து விளக்கு, பிறை நிலவு படங்களும், ராஜரராஜ சோழன் என்ற பெயரும் தேவநாகரிக எழுத்தால் எழுதப்பட்டு உள்ளது. கண்ணகி  கோயிலின் பழமையும், தமிழர்களின் கலாச்சார சின்னத்தினை உலகிற்கு எடுத்துச் சொல்ல மேலும், கூடுதல் வலுவான ஆதாரமாக இந்த செப்பு காசு  இருக்கும் என்று எம்.ராஜேந்திரன் தெரிவித்தார். இவருடன் கடலோர காவல் படை ஐ.ஜி சொங்கலிங்கமும், மங்கலதேவி கண்ணகி கோயில் அறக்கட்டளையினரும் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment