Pages

Showing posts with label பாரம்பரியப் பொருள்கள் கண்காட்சி. Show all posts
Showing posts with label பாரம்பரியப் பொருள்கள் கண்காட்சி. Show all posts

Friday, 31 May 2019

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் பாரம்பரியப் பொருள்கள் கண்காட்சி




ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் பாரம்பரியப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் முத்துக்குமார் வரவேற்றார்.  கண்காட்சியை பள்ளித் தாளாளர் கணேசக்கண்ணன் தொடங்கி வைத்தார்.
 

கண்காட்சியில் பழைய, புதிய, நுண்கற்காலக் கருவிகள், சங்ககால கருப்பு சிவப்பு மண் குவளைகள், ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள், சுடுமண் பொம்மைகள், குறியீடு உள்ள பானைஓடுகள், வட்டச்சில்லுகள், இரும்புத்தாதுக்கள், ஓலைச்சுவடிகள், எழுத்தாணிகள், கல்வெட்டுப் படிகள், நாணயங்கள், பழமையான செங்கற்கள், ஓடுகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவிகள் ராய் அன்சிகா, மதுமிதா, முகிஆஸிகா, அஸ்விகா, பத்மாவதி, விருத்திகா ஆகியோர் பாரம்பரியப் பொருள்கள் பற்றி  விளக்கமளித்தனர்.


கண்காட்சியை பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும்  பார்வையிட்டு அறிந்துகொண்டனர். மன்றப் பொறுப்பாசிரியர்  சந்தியா நன்றி கூறினார். சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் கல்வி மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு, மரபு நடை ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.