Sunday, 12 April 2026
ஆறும் மண்ணும் வரலாற்றை உருவாக்கும் காரணிகள் தொல்லியல் ஆய்வாளர் தகவல்
தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட தொண்டி தொல்லியல் ஆய்வாளர் தகவல்
இராமநாதபுரம் மாவட்டத்திலேயே, தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊராக தொண்டி திகழ்வதாக தொல்லியல் ஆய்வாளர் வே.இராஜகுரு தெரிவித்தார்.
தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியர்கள் மாணவர்களுக்கு 'ஹெட்மாஸ்டர்கள்' நெருக்கடி - தினமலர் செய்தி
நன்றி தினமலர்...
'சிவகங்கை மாவட்டத் தொல்லியல்' கருத்தரங்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அழகப்பா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வரலாற்றுத்துறை சார்பில் தொல்லியல் மரபு மன்றம் 23.02.2026 அன்று நடைபெற்ற 'சிவகங்கை மாவட்டத் தொல்லியல்' என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கத்தில் 'தொல்லியல் தேடல்களில் கல்லூரி மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன்.
பாண்டியர், சோழர் வரலாறு பேசும் இராதானூர் கல்வெட்டுகள்
இராமநாதபுர மாவட்டம், இராசசிம்மமங்கலம் வட்டத்தில், ஆனந்தூர் அருகிலுள்ளது இராதானூர். கல்வெட்டில் இவ்வூர் திருக்கானப்பேர்க்கூற்றத்து பாளூர் அல்லது பெரும்பாளூரான இராசராசநல்லூர் எனப்படுகிறது. தொடக்கத்தில், பாளூர் என அழைக்கப்பட்ட இவ்வூர், பின்னர் முதலாம் இராஜராஜசோழன் பெயரால் இராசராசநல்லூர் என நல்லூராக உருவாக்கப்பட்டுள்ளது. இராதானூரின் கிழக்கிலும், மேற்கிலும் இரு சிவன் கோயில்கள் உள்ளன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள திருவிருந்தீஸ்வரர் கோயிலில் ஐந்து கல்வெட்டுகளும், மேற்கு நோக்கி அமைந்துள்ள தில்லைவனேஸ்வரர் கோயிலில் நான்கு கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றை 1926இல் இந்தியத் தொல்லியல் துறையினர் படி எடுத்து ஆவணப்படுத்தியுள்ளனர். இராதானூர் சோழர் கால சிவன் கோயில்கள் பற்றிய கட்டுரை தினகரன் மதுரை பதிப்பு 03.03.2026 பழமை காப்போம் பகுதியில்....
School Students Discover 30,000-Year-Old Microliths near Virudhunagar
Students from the Panchayat Union Middle School in Muthaneri, located in the Narikudi block of Virudhunagar district, have discovered microliths (small stone tools) estimated to be 30,000 years old.
Through the school's functioning 'Heritage Club,' Headmaster K. Anbuvelan has been providing training to students on how to identify archaeological artifacts and inscriptions. As a result of this initiative, students—including Muthumurugan (5th grade); Akshaya, Vanishri, Mugilrajan, and Manikandan (6th grade); Rahul (7th grade); and Abi and Jenika (8th grade) conducted a field exploration near their homes and at the 'Pudukkanmai' (irrigation tank). During this survey, they discovered potsherds and stone tools, which they subsequently handed over to the Headmaster. The information provided by the Headmaster, V. Rajaguru, President of the Ramanathapuram Archaeological Research Foundation, personally inspected both the discovered stone tools and the site itself. Speaking on the matter, V. Rajaguru stated:
The students have discovered a variety of artifacts, including microliths, iron ores, black-and-red potsherds, red potsherds, sling stone, potsherd bearing symbols, the spout, iron arrowheads and hopscotches. These artifacts date back to the Mesolithic period, the Iron Age, and the Medieval period of history.
The Mesolithic period spans from approximately 38,000 BCE to 7,000 BCE. During this era, the inhabitants of these regions utilized small stone tools—known as microliths—crafted from relatively soft stones such as chert, quartz, and jasper, which are found locally in these areas. These artifacts were fitted onto the tips of wooden shafts and utilized for hunting purposes as arrowheads, small knives, and scrapers. These people lived in close proximity to rivers and streams. In this locality, traces of a stream or river that once altered its course can still be found. Microliths—small stone tools—have been discovered in the river basins of the Arjuna, Vaippar, Kruthumal, and Gundar rivers.
black-and-red potsherds, sling stone and iron artifacts were items in use during the Iron Age, spanning the period from 4000 BCE to 700 BCE. The discovery of iron ores and iron arrowheads suggests that iron smelting activities may have been conducted at this site. Red potsherds date back to the Medieval Period (300 CE – 1300 CE). One particular Red potsherds bears stamped motifs depicting flower and bird.
The archaeological artifacts unearthed by students have provided crucial evidence establishing that this locality was inhabited by humans as early as 30,000 years ago. Thus he stated.
Saturday, 11 April 2026
மாணவர்களின் நுண்கற்கருவிகள் கண்டெடுப்பு அமைச்சர் பாராட்டு
எங்கள் ஆய்வுக்கு தொடர்ந்து மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கி வரும் மாண்புமிகு அமைச்சர் எங்கள் அன்பு அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் அன்பும்.
வே.இராஜகுரு, தலைவர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம்.
https://x.com/i/status/2034237165371380058
*நமது மண்ணின் தொன்மை வரலாற்றை மீட்டெடுக்கும் இளம் வேர்கள்*
*விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், முத்தனேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவச் செல்வங்கள் சுமார் 30,000 ஆண்டுகள் பழமையான நுண்கற்கருவிகள் (Microliths), இரும்புக்காலப் பானையோடுகள் உள்ளிட்ட அரிய தொல்பொருட்களைக் கண்டெடுத்துள்ளது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அளிக்கிறது.*
*மாணவர்களிடம் வரலாற்றுத் தேடலை உருவாக்கிய பள்ளித் தலைமையாசிரியர் திரு. அன்புவேலன் அவர்களுக்கும், அதனை உறுதி செய்த தொல்லியல் ஆய்வாளர் திரு. ராஜகுரு அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். கீழடியைத் தொடர்ந்து நமது விருதுநகர் மண்ணும் பழம்பெரும் வரலாற்றைப் பேசும்!*
விருதுநகர் அருகே 30,000 ஆண்டு பழமையான நுண்கற்கருவிகளைக் கண்டெடுத்த பள்ளி மாணவர்கள்
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், முத்தனேரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 30,000 ஆண்டுகள் பழமையான நுண்கற்கருவிகளைக் கண்டெடுத்துள்ளனர்.
முத்துக்கு முத்தாக - க.வளர்மதி
முத்து என்பது வெறும் அணிகலன் மட்டுமல்ல. அழகு, தூய்மை இவற்றின் அடையாளம். கடல் ஆழத்தில், சிறிய சிற்பியின் உட்பகுதியில் உருவாகும் முத்து, இயற்கையின் அதிசயப் படைப்பு. முத்துச் சிப்பியில் இருந்து எடுக்கப்படும் விலை மதிப்புடைய உருண்டை வடிவ வெண்ணிற பொருள். ‘முத்தால் நத்தை பெருமைப்படும் மூடர் எத்தாலும் பெருமைப்படார்’ என்பது பழமொழி. 'முத்து' பற்றி இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர், ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர், க.வளர்மதி எழுதிய கட்டுரை 17.03.2026 'தினகரன்' மதுரை பதிப்பு பழமை காப்போம் பகுதியில்....
இலக்கியங்கள், கல்வெட்டுகள் காட்டும் நெசவுத்தொழில் - க.வளர்மதி
நெசவுத்தொழில் வெறும் வணிகமாக மட்டுமின்றி, அறமாகவும் கலைநயமிக்க வாழ்வியலாகவும், பார்க்கப்பட்டதை தமிழ் இலக்கியங்களில் காணலாம். பண்டைய தமிழகத்தில் வேளாண்மைக்கு அடுத்ததாக மிகச் சிறந்த தொழிலாக திகழ்ந்ததும் நெசவுத்தொழிலே. சங்க இலக்கியங்கள் முதல் பிற்கால பாண்டியர், சோழர் காலத்துக் கல்வெட்டுகள் வரை தமிழர்களின் நெசவுத்தொழில் நுட்பங்கள் குறித்த விரிவான செய்திகள் காணப்படுகின்றன. இதுபற்றி ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் திருமதி க.வளர்மதி எழுதிய 'அறுவை வணிகம்' பற்றிய கட்டுரை 17.02.2026 தினகரன் மதுரை பதிப்பு பழமை காப்போம் பகுதியில்...
Tuesday, 10 February 2026
800 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீரில் இருந்து தீர்த்தாண்டதானத்துக்கு வந்த தானம்
இராமநாதபுரத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் தொண்டியின் அருகில் உள்ளது தீர்த்தாண்டதானம். இவ்வூர் கடற்கரை அருகில் பெரியநாயகி உடனுறை சர்வதீர்த்தமுடைய நாயனார் எனும் சிவன் கோயில் உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவன் கோயில்கள் இவ்வூரும், நயினார்கோயிலும் ஆகும். இராமேஸ்வரம், சேதுக்கரை போல இங்கும் ஆடி, தை அமாவாசை நாட்களில் மக்கள் கடலில் புனித நீராடுவது வழக்கமாக உள்ளது. தெற்காசிய அளவில் புகழ்பெற்ற வணிகர் குழுக்கள் இவ்வூரில் தங்கி வணிகம் செய்துள்ள பெருமை பெற்றுள்ளது.
Theerthandathanam (Tittanam in inscriptions) is located near
Thondi on the East Coast Road from Ramanathapuram to Nagapattinam. Near the
beach of this village is the Shiva temple of Periyanayaki sametha
Sarvatheerthamudhaiya Nayanar. The Shiva temples located towards the west in
Ramanathapuram district are this village and Nayinarkoil. Like Rameswaram and
Sethukarai, people here also take a holy dip in the sea on the days of Aadi and
Thai Amavasya. It is the pride of the famous merchant guilds in South Asia to
have stayed and done business in this village.
Thursday, 5 February 2026
அறுநூற்றுவர், அறுநூற்றுமங்கலம்
வணிகரின் பாதுகாவல் படை வீரர்கள் அறுநூற்றுவர் தங்கள் பெயரில் உருவாக்கிய ஊர் அறுநூற்றுமங்கலம். மேலும் அறிய படியுங்கள் தினகரன் 'பழமை காப்போம்' பகுதியில்... 13.01.2026
கண்ணைக் கவரும் கந்திக்கோட்டை
ஆந்திர
மாநிலம், கடப்பா மாவட்டத்தில், ஜம்மலமடுகு நகரத்தில் இருந்து 16கி.மீ தொலைவில் உள்ளது கந்திக்கோட்டை.
வரலாறும், புவியியலும், இயற்கையும், சிற்பக்கலையும், கோயிலும், மசூதியும் இணைந்த அதிசயமாக
அமைந்துள்ள இவ்வூர் நம் கண்ணுக்கும், கருத்துக்கும், அறிவுக்கும் விருந்து தருவதாக
அமைந்துள்ளது.
வரலாற்று மரபுநடைப் பயணமாக அங்கு சென்றுவந்த இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு அவர்களின் பயண அனுபவம் கட்டுரையாக தினகரன் மதுரை பதிப்பு பழமை காப்போம் பகுதியில் வெளிவந்துள்ளது.
Friday, 16 January 2026
'Kathampath Thaen’ Tamil book released
G. Valarmathi, who works as an English graduate teacher at the Government Model Higher Secondary School in Regunathapuram, Ramanathapuram district. She has authored a book titled 'Kathampath Thaen: Varalaarum Vaazhviyalum', It contains 25 articles on topics such as self-confidence, teaching experiences, history, archaeology, poetry, nature, environment, and life. The book was released by the Minister for Finance, Environment and Archaeology, Thangam Thennarasu, in Mallankinaru, Virudhunagar district, and was received by S. Santhalingam, former Assistant Director of the Tamil Nadu Department of Archaeology and Secretary of the Pandyanadu centre for Historical Research. The Minister praised the author, Valarmathi, for writing a book that would be beneficial for school and college students, teachers, and the general public. V. Rajaguru, President of the Ramanathapuram Archaeological Research Foundation, Noorsahipuram Sivakumar also participated in the event.
‘வாசிப்பு அனுபவம் புத்தகம் எழுத வைத்தது’ அரசுப்பள்ளி ஆசிரியர் எழுதிய கதம்பத்தேன் நூல் வெளியீடு
இராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர்
க.வளர்மதி. இவர் தன்னம்பிக்கை, ஆசிரியர் பணி அனுபவம், வரலாறு, தொல்லியல், கவிதைகள்,
இயற்கை, சுற்றுச்சூழல், வாழ்வியல் போன்ற தலைப்புகளில் 25 கட்டுரைகளைக் கொண்ட ‘கதம்பத்தேன்
வரலாறும் வாழ்வியலும்’ என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்நூலை, விருதுநகர்
மாவட்டம், மல்லாங்கிணரில் வைத்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு வெளியிட, தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குநரும்,
பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலருமான சொ.சாந்தலிங்கம் பெற்றுக் கொண்டார். பள்ளி, கல்லூரி
மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் படித்துப் பயன்பெறும்வகையில் புத்தகம்
எழுதிய ஆசிரியர் வளர்மதிக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் இராமநாதபுரம்
தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார், கல்வெட்டு
ஆய்வாளர் உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புத்தகம் எழுதிய அனுபவம் பற்றி அரசுப்பள்ளி ஆசிரியர் க.வளர்மதி
கூறியதாவது,
ஒரு எழுத்தாளனின் வாழ்வில் முதல்
புத்தகம் என்பது ஒரு மைல்கல். அது வெறும் காகிதங்களின் தொகுப்பு மட்டுமல்ல. பல ஆண்டு
கனவுகளின் உருவம். அதற்கு நீரூற்றிய நிகழ்வு, ஆறாம் வகுப்பு ஆண்டுத்தேர்வு விடுமுறையில்
நடந்தது. அந்த கோடை விடுமுறையில், குழந்தைகள் புத்தக வாசிப்பை மேற்கொள்வதற்காக, சித்தார்கோட்டை
வாலிப முஸ்லிம் தமிழ்க் கழகம், எங்கள் வீட்டுத்திண்ணையில் அமைத்திருந்த சிறிய நூலகம்,
என் வாசிப்பு உலகை மாற்றியது.
ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு
மாணவர்களுக்கு கல்வியை எளிமையாகவும், சுவாரசியமாகவும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு
இருந்தது. குறிப்பாக மனச்சோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையை ஊட்டும் கதைகள் சொல்வதை, வழக்கமாகக்
கொண்டிருந்தேன். நேர்மறை எண்ணங்கள் ஒரு மனிதனை எவ்வாறு நேர்மையுடனும், தன்னம்பிக்கையுடனும்
வாழவைக்கும் என்பதை பல்வேறு உதாரண கதைகள் மூலம் அவர்களுக்கு உணர்த்தினேன். வழிபாட்டுக்கு
கோயிலுக்குச் சென்றபோது என்னைக் கவர்ந்த கட்டட அமைப்புகள், சிற்பங்கள் கட்டுரைகளாயின.
பள்ளிப் பணி, வீட்டுப் பணி முடித்தபின், இரவு நேரங்களில் சிறு சிறு ஆக்கங்களை எழுதினேன். வாசிப்பு எனக்கு அளித்த ஆழ்ந்த அனுபவங்களை, வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்களை, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எண்ணங்களை, ஒரு சேரத் தொகுத்து அதை ஒரு நூலாக கொண்டு வந்துள்ளேன். இது வெறும் புத்தகம் அல்ல. என் வாழ்வின் கனவு. இப்புத்தகம் பலரது வாழ்க்கையில் ஒரு சிறிய வெளிச்சத்தையாவது ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்ட ஒரு படைப்பு. நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியும் கூட. இவ்வாறு அவர் கூறினார்.

மாண்புமிகு அமைச்சர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் பதிவு
வரலாற்றில் அறுநூற்றுமங்கலம்
வணிகரின் பாதுகாவல் படை வீரர்கள் அறுநூற்றுவர் தங்கள் பெயரில் உருவாக்கிய ஊர் அறுநூற்றுமங்கலம். இவ்வூர் இராமநாதபுர மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகில் உள்ளது. மேலும் அறிய படியுங்கள் தினகரன், மதுரை பதிப்பு 'பழமை காப்போம்' பகுதியில்... 13.01.2026.
The village of Arunutrumangalam was established by the 'Arunootruvar' (six hundred soldiers) of a merchant guild's guard. This village is located near R.S. Mangalam in Ramanathapuram district, Tamil Nadu. Read more in the 'Let's Preserve Our Heritage' section of Dinakaran, Madurai Edition. Date: 13.01.2026.
Wednesday, 7 January 2026
Plea to protect ancient brick temple, granary of Pananchayal
The Ramanathapuram Archaeological Research Foundation has requested the preservation of the ancient brick temple and paddy granary at Pananchayal near Thondi in Ramanathapuram district. Regarding this, V. Rajaguru, the Founder of Ramanathapuram Archaeological Research Foundation, said,
There is a very small temple in Pananchayal, built entirely
of bricks. It is in the Pandya period architectural style and has a very small
sanctum, Arthamandapa. There is a dome
above the sanctum. There are 3 lamp niches. Three devakottas and 14
semi-pillars are built on its outer wall. The pillars have elements such as the
Bodhika, Veerakanda, Paala, and Kudam, which are made of bricks. The Bodhika of
the semi-pillars is cut Bodhika. A small standing sculpture may have been in
the sanctum. It may have been built in the 12th-13th century AD.
Black and red potsherds, iron slags, hopscotch, and
grinding stones are scattered around a pond in the south kudiyiruppu of the
village. These are broken shards of black and red vases, tumblers, and small
pots that are 2,000 years old.
A platform has been set up near the bus stand and a linga
and Vinayaga sculptures are being worshipped as a temple. There may have been a
Shiva temple here during the later Chola rule, he said.
NEWS








































