Pages

Tuesday, 20 December 2011

மதுரையின் பெருமை மீனாட்சி



தொன்மைப் பாதுகாப்பு மன்றம்


இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மைபாதுகாப்பு மன்றம். இந்தியாவின் பாரம்பரியச் சிறப்புகள் பற்றியும், தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்கள் பற்றியும், நமது பாரம்பரிய கலைகள் பற்றியும் UNESCO வால் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் பற்றியும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவுக்கிணங்க இம்மன்றம் தொடங்கப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் திரு. ஜே.ஜோ பிரகாஷ் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி இம்மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்ற பொறுப்பாசிரியர் திரு.வே.இராஜகுரு, உதவி தலைமையாசிரியர் திரு.த.ஜூலியஸ் மற்றும்  பிற ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு இம்மன்றத்தை சிறப்பாக  நடத்தி வருகிறார்.

Monday, 19 December 2011

இராமநாதபுரம் ராமலிங்க விலாசம் அரண்மனையில் உலக பாரம்பரிய வார விழா



சிதறால் மலைக்கோயில்

மன்றத்தினர்   

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறைக்கு வடகிழக்கில் நான்கு கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது சிதறால் கிராமம். திருச்சாரணத்துமலை என்னும் பாறைக் குன்றில் அமைந்துள்ளது இவ்வூர். ஒரு பாறையின் மீது தொங்கும் நிலையில் உள்ள மற்றொரு பாறை அமைப்பில் இயற்கையாக அமைந்த குகைத் தளத்தில் பகவதி கோயில் அமைந்துள்ளது. குகை மேற்கு பார்த்து உள்ளது. இயற்கையான குகையில் உள்ள தீர்த்தங்கரர்கள் மற்றும் இயக்கியர் சிற்பங்கள் இப்பகுதியின் முக்கிய சமணத்தலமாக இதைக் கருத இடமளிக்கின்றன. இச்சிற்பத் தொகுதிகளில் ஐந்து தலை நாகம் காக்கும் பார்சுவநாதர் மற்றும் பத்மாவதி இயக்கியின் உருவங்கள் கருணை பொழியும் வகையில் வடிக்கப்பட்டுள்ளன.
மற்ற சிறு உருவங்கள் அர்த்த பரியங்க ஆசனத்தில் அமர்ந்து முக்குடைகள் தலைக்கு மேல் விளங்கும் வகையில் உள்ளவை. மகாவீரர் உருவம் முக்குடைகள் அலங்கரிக்க, சைத்யமரத்துடன் (பிண்டி) இரண்டு உதவியர் சூழக் காணப்படுகிறது. அம்பிகா இயக்கி உருவம் இரண்டு குழந்தைகளுடன் யானை முத்திரை அருகில் இருக்க, திரிபங்க வளைவுகளுடன் மிக எழிலாகவும் நேர்த்தியாகவும் வடிக்கப்பட்டுள்ளது. அனைத்து முக்கியச் சிற்பங்களும் பறக்கும் வித்யாதாரர் மற்றும் அடியவர் உருவங்களுடன் காணப்படுகின்றன. ஒவ்வொரு உருவத்தின் கீழும் அதை செய்தளித்தவர்களின் பெயர், ஊர் பற்றிய விபரங்கள் வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளன. இங்கு கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை சமண சமயம் செழிப்புடன் இருந்தது என்பதற்கு இக்கல்வெட்டுகள் சான்றாக அமைகின்றன.
               பகவதி கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. பிற்காலத்தில் இக்குகை ஒரு முன் மண்டபம், கூடம், பலிபீடம், மடைப்பள்ளி ஆகிய கட்டுமானங்களுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இக்கோயில் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டு நடுவில் தீர்த்தங்கரர் சிற்பமும் வலப்பக்கம் தேவி, இடப்பக்கம் பார்சுவநாதர் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் விமானம் ஒன்றும் இக்கோயிலில் இருந்தது. தெற்குப்பகுதியில் உள்ள கல்வெட்டு தமிழ்மொழியில் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. விக்கிரமாதித்திய வரகுணனின் 28 ஆவது ஆட்சியாண்டினை இக்கல்வெட்டு குறிக்கிறது. பேராயிற்குடி அரிட்டநேமி பட்டாரகரின் சீடர் குணந்தாங்கி சூரத்திகள் இப்பகவதி கோயிலுக்குச் சில பொன் அணிகலன்களைக் கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. மண்டபத்தில் வெட்டப்பட்டுள்ள கி.பி.1300 ஆம் ஆண்டைச் சேர்ந்த (கொல்லம் ஆண்டு 475) தமிழ்க்கல்வெட்டு பகவதி கோயிலின் செலவுகளுக்காக கீழ் வேம்பநாட்டு ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த நாராயணன் தமிழ்ப் பல்லவரையன் வழங்கிய கொடையைத் தெரிவிக்கிறது.

மதுரை திருமலை நாயக்கர் மகாலில் மன்றத்தினர்








கீழக்கரை அப்பா தீவு (NATURAL HERITAGE SITE IN GULF OF MANNAR)








திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் மன்றத்தினர்


RAMANATHAPURAM PALACE